Special Scheme: 'விவசாயிகளுக்கு டெல்டா குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்புத் திட்டம்': முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
Special Scheme: விவசாயிகளுக்கு டெல்டா குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Special Scheme: 'விவசாயிகளுக்கு டெல்டா குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்புத் திட்டம்': முதலமைச்சர் ஸ்டாலின்
Special Scheme: டெல்டா குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’வேளாண் உற்பத்தியை பெருக்கி உழவர் பெருமக்களின் நல்வாழ்வில் வளமை ஏற்படுத்திட பல முன்னோக்கு திட்டங்களை கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில், உணவு உற்பத்தியை பெருக்கவும், உழவர் பெருமக்களின் வருமானத்தை அதிகமாக ஈட்டவும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தொலைநோக்குத் திட்டங்களை இவ்வரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
டெல்டா சாகுபடிக்கு நீரை திறந்துவிட கால தாமதம்:
பருவ மழைகளால், நிரம்பப்பெறும் மேட்டூர் அணை நீர், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகிய காவேரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடிக்காக ஜுன் 12ஆம் நாள் நீர் திறந்து விடப்படுவது மரபு.