Elephant Killing For Ivory: தந்தங்களுக்காக யானை கொலை! 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை - சிறப்பு புலனாய்வு குழு
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Elephant Killing For Ivory: தந்தங்களுக்காக யானை கொலை! 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை - சிறப்பு புலனாய்வு குழு

Elephant Killing For Ivory: தந்தங்களுக்காக யானை கொலை! 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை - சிறப்பு புலனாய்வு குழு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 07, 2023 01:48 PM IST

தந்தத்துக்காக யானை கொலை செய்யப்பட்ட வழக்கில் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதாக சிறப்பு புலனாய்வு குழு உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்த அறிவிக்கையில் தெரிவித்துள்ளது.

தந்தத்துக்காக யானை கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேர் மீது வழக்குப்பதிவு
தந்தத்துக்காக யானை கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேர் மீது வழக்குப்பதிவு

சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழ்நாடு முழுவதும் யானைகள் வேட்டை, வனக்குற்றங்கள் தொடர்பாக நிலுவையில் இருந்து 19 வழக்குகளை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வந்தனர். இந்த வழக்கின் விசாரணையில் முன்னேற்றம் ஏதும் இல்லாத நிலையில், கடந்த 2022 ஏப்ரல் மாதத்தில் சிபிஐ கண்காணிப்பாளர் நிர்மலா தேவி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்குமாறு உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டது.

இந்த குழுவில் தமிழ்நாடு முன்னாள் முதன்மை தலைமை வனபாதுகாவலர் சேகர்குமார், நீரஜ் உள்பட 4 அதிகாரிகள் நியிமிக்கப்பட்டிருந்தனர். வழக்கின் விசாரணைக்கு தேவைப்படும் பட்சத்தில் காவல்துறை, வனத்துறை அதிகாரிகளை சிறப்பு புலனாய்வு குழுவில் நியமித்துக்கொள்ளலாம் என நீதிமன்ற உத்தரவில் அறிவுறுத்தப்பட்டது.

இதன் அடிப்படையில் தமிழ்நாடு வன பாதுகாப்பு கல்லூரி முதல்வர் ராஜ்மோகன், மோகன் நவாஸ், ஏடிஎஸ்பி ஆகிய அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவில் நியமிக்கப்பட்டனர்.

இதையடுத்து இந்த சிறப்பு புலனாய்வு குழு கடந்த மே மாதத்தில் இருந்து நடத்திய முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில் தமிழ்நாடு தடயவியல் துறை உதவியுடன், யானைகள் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த வழக்குகளில் கர்நாடகா, கேரளா மாநிலம் அதிகாரிகளையும்சிறப்பு புலனாய்வு குழுவில் சேர்க்க கோரப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஒரு வருடம் நடத்தப்பட்ட நிர்மலா தேவி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு முதல்கட்ட விசாரணை நடத்த வழக்கு பதிவு செய்துள்ளது.

அதன்படி, தமிழ்நாடு வன சட்டம், வன உயிரியல் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் 11 சட்டப்பிரிவுகளின கீழ் சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு வழக்கு பதிவ செய்துள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் கூடலூர் காட்டுப்பகுதியில் தந்தத்துக்காக யானைகள் கொலை செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு யானை தந்தங்கள் விற்பனை செய்ய முயற்சித்த தேனி, கேரளாவை சேர்ந்த 8 நபர்கள் மீது வன பாதுகாவலர் பதிவு செய்த வழக்கை அடிப்படையாக வைத்து சிபிஐ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தேனியை சேர்ந்த முருகன், வெள்ளையன், தங்கம், கேரளாவை சேர்ந்த மேத்யூ, ஜான், ஜான்சன், நித்திந், அசோகன், அப்துல் அஜீஸ் என 8 பேரிடம் சிபிஐ சிறப்பு சிறப்பு புலனாய்வு குழு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

யானைகள் உயிரிழப்பு தொடர்பான மீதமுள்ள வழக்குகளையும், தந்தங்களுக்காக வேட்டையாடப்பட்ட யானைகள் தொடர்பான வழக்குகளையும் முதல்கட்ட விசாரணை முடிந்த பின்னர் அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.