Siddha University Bill: ’சித்த மருத்துவத்திற்கு ஆளுநர் விரோதியாக இருக்க மாட்டார்’ மா.சுப்பிரமணியன் நம்பிக்கை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Siddha University Bill: ’சித்த மருத்துவத்திற்கு ஆளுநர் விரோதியாக இருக்க மாட்டார்’ மா.சுப்பிரமணியன் நம்பிக்கை!

Siddha University Bill: ’சித்த மருத்துவத்திற்கு ஆளுநர் விரோதியாக இருக்க மாட்டார்’ மா.சுப்பிரமணியன் நம்பிக்கை!

Kathiravan V HT Tamil
May 04, 2023 02:36 PM IST

ஆளுநருக்கு அன்போடு கேட்டுக்கொள்ள விரும்புவதெல்லாம், பிரதமர் அவர்களே கூட குஜராத் மாநிலத்தில் இது போன்ற நடவடிக்கை மேற்கொள்ள சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது-மா.சுப்பிரமணியன்

ஆளுநர் ஆர்.என்.ரவி - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஆளுநர் ஆர்.என்.ரவி - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அப்போது அவர் கூறுகையில், பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்தமருத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த மசோதாவிற்கான அறிவிப்பு தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட்டில் வெளியிடப்பட்டது.

2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி சென்னைக்கு அருகில் தனி சித்த மருத்துவ பல்கலைக்கழகம் நிறுவப்படும் என்று அன்றைய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரின் கடிதத்தில் தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக் கழகத்திற்கான சட்டமுன்வடிவை அனுப்பினார்.

2022 பிப்ரவரி 18ஆம் தேதி மேற்குரிய சட்டவரைவு சட்டத் துறையுடன் கலந்தாலோசித்து, சட்டப்பல்கலைக்கழக வரைவு மசோதா 2022 பிப்ரவரி 18ஆம் தேதி ஆளுநரின் பரிசீலனைக்கும் அனுப்பப்பட்டது. 15.3.2022 அன்று தமிழ்நாடு சித்தா பல்கலைக்கழக வரைவு மசோதாவை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்த ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

16.3.2022 அன்று அடுத்த நாளே ஆளுநரின் முதன்மை செயலாளர் அனுப்பிய கடித்தத்தில் மூன்று அமைச்சர்களுடன் முதலமைச்சர் என்னை சந்தித்தார், இந்த மசோதா யுஜிசி சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

21.4.2022 அன்று சட்டம் மற்றும் உயர்கல்வித்துறையின் கருத்துக்களை முன்வைத்து யுஜிசியின் சட்டங்களுக்கு முரண்பாடாக இல்லை என்று ஆளுநரின் முதன்மை செயலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 16.3.2022 அன்று ஆளுநரின் முதன்மை செயலாளர் விளக்கம் ஒன்றை கேட்டார். 

அரசின் சார்பில் சட்ட வல்லுநர்கள் கூடி 21.4.2022 அன்று யுஜிசி சட்டம் மற்றும் விதிகளுக்கு முரண்பாடாக இல்லை என்ற வகையில் விளக்கம் தரப்பட்டது. 24.4.2022 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா தாக்கல் செய்யப்பட்டு மறுநாளே நிறைவேற்றப்பட்டது.

5.5.2022 அன்று தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா சட்டத்துறையால் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. 25.7.2022 அன்று ஆளுநரின் முதன்மை செயலாளர் அனுப்பிய கடிதத்தில், சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவில் மாணவர் சேர்க்கை தொடர்பான பிரிவுகள் இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணைய சட்டம் 2020-இல் உள்ள சட்டப்பிரிவுகளுக்கு முரண்பாடாக உள்ளதா என்பதை ஆராய்ந்து குறிப்புரை தருமாறு கேட்டுக்கொண்டார்.

5.8.2022ஆம் தேதி அன்று ஆளுநர் மாளிகைக்கு தகுந்த விளக்கம் அளிக்கும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இதற்கான விளக்கத்தை சட்டத்துறைக்கு அனுப்பியது. 17.9.2022ஆம் தேதி இந்த விளக்கத்தை ஆளுநருக்கு சட்டத்துறை அனுப்பி வைத்தது.

தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு 19.10.2022, 15.11.2022, 14.12.2022, 24.1.2023, 27.2.2023, 28.3.2023, 28.4.2023 என ஏழு முறை சட்டத்துறை முன்மை செயலாலர் ஆளுநரின் முதன்மை செயலாளருக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளுக்கு முரணாக உள்ளது என்ற பொருந்தாத தகவலை சொல்லி இருப்பது வியப்பாக உள்ளது. ஆளுநர் மாளிகை கேட்ட அனைத்து விளக்கங்களுக்கும் தெளிவான பதில் அனுப்பப்பட்டுள்ளது. 

உயர்க்கல்வித்துறையை பொறுத்தவரை பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பதில் இந்த சட்டமசோதா கொண்டு வரும்போதே குஜராத், கர்நாடகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் முதல்வர்களே துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளது என்கிற வகையில் இந்த மசோதா கொண்டுவரும் போதே தெரிவிக்கப்பட்டது. 

கடந்த 2013ஆம் ஆண்டு இன்றைய பிரதமர் மோடி அவர்கள் குஜராத் முதல்வராக இருந்த போதே இதுபோன்ற மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி உள்ளார்.

ஆளுநருக்கு அன்போடு கேட்டுக்கொள்ள விரும்புவதெல்லாம், பிரதமர் அவர்களே கூட குஜராத் மாநிலத்தில் இது போன்ற நடவடிக்கை மேற்கொள்ள சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இது யுஜிசி விதிகளுக்கு முரணாக உள்ளது என்று சொல்வது பொருந்தும் காரணமாக தெரியவில்லை. யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு விதிகளில் பல்கலைக்கழங்களுக்கு துணைவேந்தர்களை ஆளுநர்கள்தான் நியமிக்க வேண்டும் என்ற சட்டம் எங்கேயும் இல்லை. 

தனியார் பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்களை எந்த ஆளுநரும் நியமிக்கவில்லை, மாநில அரசின் நிதி பங்களிப்போடு நடைபெறும் பல்கலைக் கழகங்களில் மாநில அரசே துணை வேந்தர்களை நியமிக்க வேண்டும்.

இன்னமும் கூட எங்களுக்கான நம்பிக்கை சித்த மருத்துவத்திற்கு ஆளுநர் விரோதியாக இருக்க மாட்டார். சித்தமருத்துவம் அவருக்கு எதிர்ப்பான ஒன்றாக இருக்காது. தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்களின் விருப்பமாக உள்ள சித்த மருத்துவ மசோதாவுக்கு அவர் ஒப்புதல் தருவார் என்றே எதிர்ப்பார்க்கிறோம். ஆளுநருடன் சட்டப்பேராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.