Senthil Balaji: கரூர் ஐடி ரெய்டு.. அதிகாரிகளின் கார் கண்ணாடிகளை உடைத்து அட்டகாசம் செய்யும் திமுகவினர்.. பரபரப்பான சூழல்!
கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடி திமுகவினரால் உடைக்கப்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இரண்டு வீடுகளிலும் அதிக அளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். மொத்தம் 40 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி வருகிறது.
தமிழ்நாடு முழுக்க அவருக்கு இருக்கும் நிறுவனங்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரிடம் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜி நெருக்கமாக பழகும் எல்லோரும் வருமான வரித்துறை சோதனையில் சிக்கி உள்ளனர். அவருக்கு நெருக்கமான அனைவரின் வீடுகளிலும் வருமான வரித்துறை குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் குமார், நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறது.
சென்னை, கரூர், கோவையில் இந்த ரெய்டு அதிக அளவில் ரெய்டு நடத்தி வருகின்றனர். கரூரில் இருக்கும் செந்தில் பாலாஜி வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக அரசு ஒப்பந்ததாரர்கள் மீது வருமானவரித்துறை ரெய்டு நடத்தி வருகின்றனர். அரசு ஒப்பந்ததாரர்கள்தான் அதிகமாக ரெய்டில் குறி வைக்கப்பட்டு உள்ளனர். டாஸ்மாக் ஒப்பந்தம், மின்சாரத்துறையில் ஒப்பந்தம் மேற்கொண்ட ஒப்பந்தாரர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது
வருமான வரித்துறை சோதனை நடைபெறும் இடங்களில் திமுகவினர் குவிந்து வருவதால் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அலுவலகம் உள்ளிட்ட 5 இடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மொத்தம் 40 இடங்களில் ரெய்டு என்று தகவல் வெளியானாலும், உண்மையான எண்ணிக்கைப்படி 200க்கும் அதிகமான அதிகாரிகள் இந்த ரெய்டை நடத்தி வருகின்றனர். இந்த ரெய்டு பெரும்பான்மைக்கும் அடுத்த 3 நாட்களுக்கு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக கொங்கு மண்டலங்களை குறி வைத்து ரெய்டு நடத்தப்படுகிறது.
மத்திய அரசின் கீழ் இயங்கும் வருமான வரித்துறை சார்பாக இந்த ரெய்டு நடத்தப்படுகிறது. செந்தில் பாலாஜியின் கரூர் வீடு, சென்னையில் உள்ள கிரீன் வேஸ் வீட்டிலும் இன்று அதிகாலையிலேயே அதிகாரிகள் நுழைந்து அந்த சாலையை மொத்தமாக மூடி ரெய்டு நடத்தி வருகின்றனர். இதனால் அங்கே பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில் கரூரில் அதிகாரிகளை முற்றுகையிட்டு திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடி திமுகவினரால் உடைக்கப்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. பாதுகாப்பு கருதி வருமானவரித்துறை அதிகாரிகள் கரூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்