Senthil Balaji: செந்தில் பாலாஜி வழக்கு நாளை ஒத்தி வைப்பு
செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணை நாளைக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை நாளை ஒத்தி வைத்து நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜியின் வழக்கை 3 ஆவது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் அமர்வு விசாரிக்கும் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நேற்று அறிவித்தார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணை இன்று சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதாட உள்ளார். இதனால் இந்த வழக்கை நாளைக்கு விசாரணைக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்த நீதிபதி, இரு தரப்பும் ஒப்புதல் தெரிவித்தால் வரும் சனிக்கிழமை விசாரிப்பதாக தெரிவித்தார்.
முன்னதாக செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் என அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில் நீதிபதிகள் நிஷாபானு மற்றும் பரதசக்ரவர்த்தி அமர்வு நேற்று தீர்ப்பை வழங்கி உள்ளது. இதில் நீதிபதி நிஷா பானு அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என கூறி செந்தில் பாலாஜியை விடுவிப்பதாக அறிவித்துள்ளார்.
ஆனால் நீதிபதி பரத சக்கரவர்த்தி இது தள்ளுபடி செய்யத்தக்க மனு என்று அறிவித்துள்ளார். மேலும் செந்தில் பாலாஜி ஒரு நிமிடம் கூட கஷ்டடியில் இல்லை சிகிச்சை நாட்களை நீதிமன்ற காவலாக கருத முடியாது என்று அறிவித்துள்ளார்.
இதனால் அமலாக்கத்துறை மற்றும் செந்தில் பாலாஜி தரப்பின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ற கேள்வி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இந்நிலையில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ள நிலையில் தலைமை நீதிபதி அறிவிக்கும் 3 ஆவது நீதிபதி விசாரிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் நீதிபதி சி.வி. கார்த்தியேனை 3 ஆவது நீதிபதியாக நியமித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
சி.வி கார்த்திகேயன் கடந்த 18 ஆண்டுகள் நீதிபதியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்