Seeman Vs Vijayalakshmi: ’விஜயலட்சும் புகார்! விசாரணைக்கு ஆஜராகாதது ஏன்?’ சீமான் விளக்கம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Seeman Vs Vijayalakshmi: ’விஜயலட்சும் புகார்! விசாரணைக்கு ஆஜராகாதது ஏன்?’ சீமான் விளக்கம்!

Seeman Vs Vijayalakshmi: ’விஜயலட்சும் புகார்! விசாரணைக்கு ஆஜராகாதது ஏன்?’ சீமான் விளக்கம்!

Kathiravan V HT Tamil
Sep 12, 2023 04:47 PM IST

”சீமான் இன்று விசாரணைக்காக ஆஜராகவில்லை. சீமான் சார்பில் அவரது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்கள் ஆஜராகி காவல்துறையிடம் கடிதம் அளித்தனர்”

காவல் நிலையத்தில் சீமான் சார்பில் அளிக்கப்பட்ட கடிதம்
காவல் நிலையத்தில் சீமான் சார்பில் அளிக்கப்பட்ட கடிதம்

அப்போது அவர் அளித்த பேட்டியில், சீமான் மீது ஏற்கெனவே புகார் அளித்தோம். அப்போது அதிமுக எந்த விசாரணையும் நடத்தவில்லை. என்னை மீதுதான் விசாரணை நடத்தினார்கள். சீமான் மீது அதிமுகவினர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை . கட்டாயப்படுத்தி 6 முறை எனக்கு சீமான் கருகலைப்பு செய்துள்ளதாக குற்றம்சாட்டி இருந்தார்.

இதனை தொடர்ந்து நடிகை விஜயலட்சுமியிடம் கோயம்பேடு துணை ஆணையர் உமையாள் 6 மணி நேரம் விசாரணை நடத்தினார். அதனை தொடர்ந்து கடந்த வாரம் திருவள்ளூர் மாவட்ட மகிளா கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி பவித்ரா முன்பு நடிகை விஜயலட்சுமியை ஆஜர்படுத்தி வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டது. இந்த விசாரணையில் மேலும் சில ஆவணங்களை மற்றும் போட்டோக்களை நீதிபதியிடம் நடிகை விஜயலட்சுமி சமர்பிப்பத்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி அன்று காலை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை நடத்திய நிலையில், நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தனர்.

ஆனால் சீமான் இன்று விசாரணைக்காக ஆஜராகவில்லை. சீமான் சார்பில் அவரது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்கள் ஆஜராகி காவல்துறையிடம் கடிதம் அளித்தனர். அக்கடிதத்தில், கடந்த 08.09.2023 தேதியிட்ட குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் 160-இன் கீழ் விசாரணைக்காக நான் தங்கள் முன் ஆஜராக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்ட காவல்துறை அழைப்பாணையை பெற்றேன். 

பதிவு செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவதால் ஏற்கெனவே பிற மாவட்டங்களில் ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகள் காரணமாகவும் மற்றும் வேறு ஒரு அரசியல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய சூழல் உள்ளதாலும் என்னால் தங்கள் முன் நேரில் ஆஜராக இயலவில்லை.

எனவே மேற்கண்ட வழக்கு சம்பந்தமாக என் சார்பில் தங்கள் முன், ஆஜராக எனது வழக்கறிஞர் திரு.சேவியர் பிலிக், திரு.சி.சங்கர் மற்றும் திரு இரா.பிரவீன் ஆனந்த் ஆகியோருக்கு நான் அதிகாரம் அளித்துள்ளேன். என் சார்பில் வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள், ஏதேனும் வழங்கப்பட வேண்டும் என்றால் அவற்றை மேற்கண்ட எனது வழக்கறிஞர்கள் பெற்றுக் கொள்ளவும் முழு அதிகாரம் அளிக்கிறேன் என சீமான் தெரிவித்துள்ளார்.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.