தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Second Round Counselling For Indian Medicine Studies At Chennai

இந்திய மருத்துவ படிப்புகள் – இரண்டாம் சுற்று கலந்தாய்வு எப்போது?

Priyadarshini R HT Tamil
Feb 03, 2023 12:02 PM IST

இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு வரும் 11ம் தேதி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவமனை வளாகத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் இந்தாண்டு அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு மற்றும் தனியார் கல்லூரிகளின் அகில இரிய ஒதுக்கீடு ஆகிய இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தியது. அதில், அரசுக்கல்லூரிகளில் 24 சித்தா இடங்கள், 3 ஆயுர்வேத இடங்கள், 7 ஹோமியோபதி இடங்கள், 27 யுனானி இடங்கள் நிரம்பவில்லை.

அதேபோல், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 272 ஹோமியோபதி இடங்கள், 54 ஆயுர்வேத இடங்கள், 24 சித்தா இடங்கள் காலியாக உள்ளன. அகில இந்திய ட ஒதுக்கீட்டிலும் 127 இடங்கள் நிரம்பாமல் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மொத்தமுள்ள 521 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் 503 இடங்கள் காலியாக உள்ளன. மொத்தமாக 1,041 இடங்கள் நிரம்பாமல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த இடங்களுக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு வரும் 11ஆம் தேதி சென்னை அரும்பாக்கம் இந்திய மருத்துவமனை வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதில், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களும், முதல் சுற்றில் பங்கேற்று கல்லூரிகளில் கல்லூரிகளில் இடங்களைப் பெற்று அதனை மாற்ற விரும்புபவர்களும் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு https://tnhealth.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்க்க வேண்டும். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்