‘தீபாவளிய கொண்டாடுங்கடே’ - நாளையும் விடுமுறை அறிவித்த தமிழக அரசு - யார் யாருக்கெல்லாம் விடுமுறை கிடைக்கும்? - விபரம்!
தீபாவளி பண்டிகை வருகிற 31ம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில், நாளை விடுமுறை வழங்கப்படுமா என்பதற்கு தமிழக அரசு பதில் அளித்திருக்கிறது.
நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் தமிழக அரசு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
இது குறித்து வெளியான அறிவிப்பில், தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகள். கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை (30.10.2024) முற்பகல் மட்டுமே செயல்படும். பிற்பகல் அரைநாள் விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு இருக்கிறது.
நரகாசுரன் வதம் செய்யப்பட்ட நாளானது தீபாவளி பண்டிகை மக்களால் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையானது வருகிற அக்டோபர் 31, 2024 அன்று வியாழக்கிழமை வெகு விமர்சையாக கொண்டாப்படுகிறது. இதனை முன்னிட்டு அக்டோபர் 31, நவம்பர் 1 ஆகிய தேதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகள் என அனைத்திற்கும் பொது விடுமுறை என தமிழக அரசு அறிவித்தது. (இதில் நவம்பர் 1ம் தேதிக்கு பதிலாக நவம்பர் 9ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.)
அதன் பின்னர் இந்த நாட்களுக்கு பிறகு வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு கிழமைகள் வந்ததால், தீபாவளி பண்டிகைக்கு நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால், தமிழகத்தில் தொழில் நிமித்தமாக வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் பொருட்டு சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். இதனால் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதி காணப்படுகின்றது. மக்கள் பாதுகாப்பாக சொந்த ஊர் திரும்ப தமிழக அரசு சார்பில் கூடுதல் பேருந்துகள் விடப்பட்டு இருக்கின்றன.
இந்த விடுமுறை ஒரு பக்கம் இருக்க, நாளை பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாள் மற்றும் குருபூஜை விழா நடைபெறுகின்றது. அதனால் தேவர் ஜெயந்திக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்துவதற்காக அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் ஏராளமானோர் நாளை சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தருவதினால், அங்கு நாளை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தலை தீபாவளிக்கு செல்ல வேண்டிய கோயில்கள்!
தலை தீபாவளி
தலைத் தீபாவளி என்பது திருமணமான புதுத் தம்பதிகள் கொண்டாடும் முதல் தீபாவளிப் பண்டிகையாகும். இப்பண்டிகையின் பொழுது மணமகன், மணமகள் வீட்டினருடன் இப்பண்டிகையை கொண்டாடுகிறார். இப்பண்டிகையின் பொழுது மணமகள் வீட்டிலிருந்து புத்தாடைகள் மணமகனுக்கு தரப்படுகின்றன.
செல்வங்களின் அதிபதி குபேரன்
தலை தீபாவளி கொண்டாடும் தம்பதியினரின் வாழ்வில் செல்வம் செழித்தொழுக வேண்டும். எனவே அவர்கள் செல்வங்களின் அதிபதியான குபேரன் ஆலயத்திற்கு செல்வது அவர்களது வாழ்வின் செழுமையாக்கும். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள குபேரர் ஆலயத்திற்கு சென்று வந்தால் அவர்களின் வாழ்வில் செல்வமும் வளமும் ஒருசேர கிடைத்து வாழ்க்கை செழிக்கும் என நம்மப்படுகிறது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இந்த கோயிலுக்கு தலை தீபாவளி கொண்டாடும் தம்பதியினர் சென்றுவர பரிந்துரை செய்யப்படுகிறது.
ஸ்ரீரங்கம் பெருமாள்
வாழ்வில் வளம் கொழிக்கவும், வாழ்க்கை செழிக்கவும் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் செல்ல வேண்டும். தீபாவளி அன்று இந்த கோயில் பெருமாளுக்கு எண்ணெய்க் காப்பிட்டு, திருமஞ்சனம் செய்து, புதிய வஸ்திரம் அணிவித்து அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அன்று ஆழ்வார்களையும், ஆச்சார்யர்களையும், கிளி மண்டபத்துக்கு எழுந்தருளச் செய்த பின் திருமஞ்சனம் நடைபெறும். அங்கே பெருமாளுக்கு விசேஷமான ‘ஜாலி அலங்காரம்’ செய்வர். ஜாலி அலங்காரம்' என்பது தீபாவளி அன்று மட்டும் நடைபெறும் அலங்காரமாகும்.
அம்மன்
தஞ்சாவூரில் இருக்கும் ஸ்ரீபங்காரு காமாட்சி அம்மன் கோயிலுக்கு தம்பதி சகிதமாக சென்று வர வீட்டில் அனைத்து செல்வங்களும், பாக்கியங்களும் கிடைக்கும். தீபாவளி அன்று இந்த காமாட்சி அம்மனுக்கு முறத்தில் வைத்து படைக்க வேண்டும். அதில் தீபாவளி பலகாரங்களை வைத்து வணங்க வேண்டும். இக்கோயிலுக்கு சென்று வணங்குவதால் வீட்டில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். மாங்கல்ய பலம் பெருகும் என்பது நம்பிக்கை ஆகும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்