தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  School Boy Commits Suicide In Thoothukudi

Thoothukudi: கேம் விளையாட நெட் இல்ல.. பள்ளி சிறுவன் எடுத்த விபரீத முடிவு

Aarthi V HT Tamil
Mar 28, 2023 07:48 AM IST

கேம் விளையாட நெட் இல்லாத காரணத்தினால் பள்ளி சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சிய ஏற்படுத்தி உள்ளது.

பள்ளி சிறுவன்
பள்ளி சிறுவன்

ட்ரெண்டிங் செய்திகள்

மகன் குகன் 13 நகராட்சி நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். பப்ஜி, பிரீபையர் போன்ற வீடியோ கேம்ஸ்கள் விளையாடுவதை இவர் வழக்கமாக வைத்து உள்ளார்.

இதனிடையே தொலைப்பேசி இணையதள நெட்வொர்க் டேட்டா முடிந்ததால் ரீசார்ஜ் செய்து தரும்படி பெற்றோரிடம் கேட்டார். அதற்கு பெற்றோர் அவர்கள் நாளை ரீசார்ஜ் செய்து தருவதாக கூறினர்.

இதனால் மனமுடைந்த குகன் வீட்டில் தாயார் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குகன் படிப்பில் முதலிடம் பெறுபவர். வீடியோ கேம்ஸ் விளையாட்டில் ஆர்வம் கொண்டதால் இது போன்ற முடிவை எடுத்து உள்ளார்.

பப்ஜி, பிரீபையர் போன்ற வெளிநாட்டு விளையாட்டுகள் தடை செய்யப்பட்டு இருக்கிறது. இருப்பினும் பலரும் அதனை மாற்று வகையில் டவுன்லோட் செய்து விளையாடி வருகின்றனர். இது போன்ற உயிரிழப்புகளை தவிர்க்க பப்ஜி, பிரீபையர் போன்ற வெளிநாட்டு விளையாட்டுகளை முற்றிலும் அரசு தடை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.

குறிப்பு

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம். மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்