தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Scholarship For Unemployed Youth Call To Apply

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – விண்ணப்பிக்க அழைப்பு

Priyadarshini R HT Tamil
Mar 05, 2023 12:41 PM IST

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளைப்பொறுத்தவரை, எழுதப்படிக்க தெரிந்தவர் முதல் பத்தாம் வகுப்பு, மேல்நிலை வகுப்பு பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்து 31.12.2022 அன்றைய தேதியில் ஓராண்டு முடிவடைந்த பதிவுதாரர்கள் தகுதியுடையவர் ஆவர்.

பட்டியலின பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும்இருக்க வேண்டும். அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கும் மிகாமல்இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு மற்றும்வயது வரம்பு ஏதுமில்லை. அரசின் முதியோர் உதவித்தொகை பெறுபவர்களாயின், அவர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியில்லை. பயன்தாரர்எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும்பயிலுபவராக இருக்கக்கூடாது. இத்தகுதிகளை உள்ளடக்கிய பதிவுதாரர்களுக்கு, தமிழக அரசால் கீழ்க்கண்டவாறு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

பொதுப்பிரிவினர், பத்தாம் வகுப்புதேர்ச்சியின்மை (SSLC-Failed) - ரூ.200/-, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு (SSLC-Passed) ரூ.300/- பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு (HSC-Passed) - ரூ.400/-, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு (DEGREE- Passed) - ரூ.600/- அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை எழுதப்படிக்கதெரிந்த மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு - ரூ.600/-, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு (HSC-Passed) ரூ.750/- பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு (DEGREE- Passed) ரூ.1000/- உதவித்தொகை வழங்கப்படுகிறது.)

மேற்குறிப்பிட்டதகுதியுடைய பதிவுதாரர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, அசல் பள்ளி/கல்லூரிமாற்றுச் சான்றிதழ் மற்றும் அசல் குடும்ப அட்டைஆகியவற்றுடன் நேரில் வந்து விண்ணப்பப்படிவத்தை திருச்சிராப்பள்ளி மற்றும் அந்தந்தமாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையத்தில் இலவசமாக பெற்று பயன்பெறலாம். 

ஏற்கனவே மூன்றாண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள் மற்றும் பொறியியல், மருத்துவம், விவசாயம் மற்றும் சட்டம் போன்ற தொழிற் கல்வி, பட்டப்படிப்புகள் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை பெற தகுதியில்லை எனதெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்