Savukku Shankar : ஐடி ரெய்டு.. ’போச்சா.. இந்த வீட்டை விட்டுறாதீங்க சார்’ செந்தில் பாலாஜியை விளாசும் சவுக்கு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Savukku Shankar : ஐடி ரெய்டு.. ’போச்சா.. இந்த வீட்டை விட்டுறாதீங்க சார்’ செந்தில் பாலாஜியை விளாசும் சவுக்கு!

Savukku Shankar : ஐடி ரெய்டு.. ’போச்சா.. இந்த வீட்டை விட்டுறாதீங்க சார்’ செந்தில் பாலாஜியை விளாசும் சவுக்கு!

Divya Sekar HT Tamil
May 26, 2023 11:28 AM IST

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில் சவுக்கு சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்

அவருக்கு நெருக்கமான அனைவரின் வீடுகளிலும் வருமான வரித்துறை குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் குமார், நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறது. சென்னை, கரூர், கோவையில் இந்த ரெய்டு அதிக அளவில் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

கரூரில் இருக்கும் செந்தில் பாலாஜி வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக அரசு ஒப்பந்ததாரர்கள் மீது வருமானவரித்துறை ரெய்டு நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் ஒப்பந்தம், மின்சாரத்துறையில் ஒப்பந்தம் மேற்கொண்ட ஒப்பந்தாரர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. வருமான வரித்துறை சோதனை நடைபெறும் இடங்களில் திமுகவினர் குவிந்து வருவதால் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அலுவலகம் உள்ளிட்ட 5 இடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மொத்தம் 40 இடங்களில் ரெய்டு என்று தகவல் வெளியானாலும், உண்மையான எண்ணிக்கைப்படி 200க்கும் அதிகமான அதிகாரிகள் இந்த ரெய்டை நடத்தி வருகின்றனர். இந்த ரெய்டு பெரும்பான்மைக்கும் அடுத்த 3 நாட்களுக்கு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கரூரில் அதிகாரிகளை முற்றுகையிட்டு திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடி திமுகவினரால் உடைக்கப்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. பாதுகாப்பு கருதி வருமானவரித்துறை அதிகாரிகள் கரூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில் பிரபல பத்திரிகையாளராகவும், அரசியல் விமர்சகராகவும் இருக்கும் சவுக்கு சங்கர் இந்த ரெய்டு தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்த சில விஷயங்களை காண்போம்.

முன்னதாக  மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிதான் அடுத்த முதலமைச்சர், திமுகவை அபகரிக்க திட்டமிட்டுள்ளார். மஹாராஷ்டிரா ஷிண்டே போல் தமிழகத்தில் செந்தில் பாலாஜி என கூறியிருந்தார். மேலும் செந்தில் பாலாஜி பல கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாகவும், பணி நியமன ஆணைக்கு பல லட்சம் வசூலிப்பதாகவும் கூறியிருந்தார்.

கரூரில் பல கோடி மதிப்பிலான வீடு கட்டுவதாகவும் சவுக்கு சங்கர் பல்வேறு சமூக வலை தளத்தில் பேட்டி கொடுத்தார், டுவிட்டர் மூலமாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கருக்கு எதிராக 4 பிரிவின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.