Savukku Shankar Arrest : பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் கைது - கோவை அழைத்து வந்த வழியில் விபத்து.. பின்னணி இதுதான்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Savukku Shankar Arrest : பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் கைது - கோவை அழைத்து வந்த வழியில் விபத்து.. பின்னணி இதுதான்!

Savukku Shankar Arrest : பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் கைது - கோவை அழைத்து வந்த வழியில் விபத்து.. பின்னணி இதுதான்!

Pandeeswari Gurusamy HT Tamil
May 04, 2024 10:15 AM IST

Savukku Shankar Arrested : கடந்த சில நாட்களாக காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் சவுக்கு சங்கர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து காவல்துறையில் உள்ள பெண் காவலர்கள் குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் பேசிய விவகாரத்தில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் அதிரடி கைது - காரணம் இதுதான்! (கோப்புப்படம்)
பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் அதிரடி கைது - காரணம் இதுதான்! (கோப்புப்படம்)

சவுக்கு மீடியா என்ற பெயரில் இணையதளம் ஒன்றை நடத்தி வருபவர் சவுக்கு சங்கர். இவர் தொடர்ந்து அரசை விமர்சிக்கும் வகையிலும், பிரச்சனைகளை சுட்டும் வகையிலும் பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் சவுக்கு சங்கர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து காவல்துறையில் உள்ள பெண் காவலர்கள் குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் பேசிய விவகாரத்தில் அவரை கோவை சைபர் கிரைம் போலீசார் தேனியில் வைத்து இன்று அதிகாலை 3 மணியளவில் கைது செய்துள்ளனர். 

இந்நிலையல் கைது செய்யப்பட்ட அவரை அங்கிருந்து கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் அவரை கோவைக்கு அழைத்து வருகின்றனர். கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர். விசாரணைக்கு பின்னர் சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர் என்ற முதல் கட்ட தகவல்கள் வெளியானது. 

விபத்து

இந்நிலையில் சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வாகனம் வழியில் சிறிய விபத்துக்குள்ளானது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் காவல் துறை வாகனம் மீது கார் மோதியதாக கூறப்படுகிறது இதில் காவலர்கள் மற்றும் சவுக்கு சங்கர் என அனைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதனை எடுத்து தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் சங்கர் மற்றும் காவல்துறையினர் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து வரும் வழியில் மருத்துவமனையில் முதலுதவி பெற்ற பின்னர் கோவைக்கு அதே வாகனத்தில் கோவைக்கு அழைத்து வருகின்றனர். 

எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

"விடியா திமுக அரசின் ஊழல்களை தொடர்ந்து மக்களிடத்தில் அம்பலப்படுத்தும் சவுக்கு மீடியா ஊடகத்தை முடக்கும் முனைப்பில் அந்நிறுவன ஊழியர்கள் மற்றும் வாசகர்களை குறிவைத்து காவல்துறையை ஏவி பொய் வழக்குகளில் கைது செய்யும் விடியா அரசின் அராஜகப் போக்கிற்கு எனது கண்டனம்.

ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளை தன் கைகளுள் வைத்துக்கொண்டு, தான் ஏதோ நல்லாட்சி வழங்குவது போல ஒரு பொய் பிம்பத்தை உருவாக்கி, அந்த மாய உலகத்தில் ஸ்டாலின் அவர்கள் திளைத்துக் கொண்டிருப்பதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன்.

அதனையும் மீறி சில ஊடகங்கள் இந்த விடியா ஆட்சியின் அவலங்களை மக்களிடத்தில் அம்பலபடுத்தினால், தன் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை ஏவி பொய் வழக்குகளால் முடக்க முயற்சிப்பது திமுகவிற்கே உரித்தான அராஜக பாசிச குணம்.

சவுக்கு மீடியாவின் ஊழியர்கள் மற்றும் வாசகர்கள் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி ஏவல்களை உடனடியாக கைவிட்டு, மக்களாட்சியின் நான்காம் தூணான ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதிசெய்யுமாறு விடியா அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.