Enforcement Directorate : மீண்டும் தொடங்கியது.. அமலாக்கத்துறை ஆபரேஷன்! டிஜிபிக்கு பறந்த கடிதம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Enforcement Directorate : மீண்டும் தொடங்கியது.. அமலாக்கத்துறை ஆபரேஷன்! டிஜிபிக்கு பறந்த கடிதம்!

Enforcement Directorate : மீண்டும் தொடங்கியது.. அமலாக்கத்துறை ஆபரேஷன்! டிஜிபிக்கு பறந்த கடிதம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 27, 2024 12:52 PM IST

Enforcement Directorate: கான்பூரில் உள்ள ஐஐடி நிபுணர்கள் உதவியுடன் அறிவியல் பூர்வமாக எந்த ஆழத்திற்கு எவ்வளவு மணல் அள்ளப்பட்டது என ஆய்வு நடத்தப்பட்டது. விசாரணையில் அரசு 490 ஏக்கர் அளவுக்கு மணல் அள்ள அனுமதி அளித்துள்ள நிலையில் 2,450 ஏக்கர் அளவுக்கு மணல் அள்ளப்பட்டுள்ளது.

மணல் கொள்ளை (கோப்புப்படம்)
மணல் கொள்ளை (கோப்புப்படம்)

தமிழகத்தில் சுமார்ரூ.4,730 கோடி அளவுக்கு மணல் கொள்ளை நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து மணல் குவாரிகளில் ஏற்கனவே மத்திய புலனாய்வுத்துறை அமைப்புகள் சோதனை நடத்தி பல ஆவணங்களை சேகரித்து உள்ளன.

டிஜிபிக்கு கடிதம்

 இந்த நிலையில் அமலாக்கத்துறை டிஜிபிக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளது அதில் கூறப்பட்டுள்ளதாவது, "பணப்பரிவர்த்தனை முறைகேடு தடுப்புச் சட்டம் பிரிவு 66(2) இன் படி இந்த கடிதத்தை அமலாக்கத்துறை அனுப்பி உள்ளது. அதில் கடந்த 9 மாதங்களாக நடத்தப்பட்ட விசாரணையில் தமிழகத்தில் 2023 மற்றும் 24 காலத்தில் சட்ட விரோதமாக 23.64 லட்சம் யூனிட் அளவுக்கு மணல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

குத்தகைக்கு விடப்பட்ட மணல் படுகைகளில் மணல் அள்ளும் இயந்திரங்கள் மூலமாக தனியார் ஒப்பந்ததாரர்கள் எப்படி மணலை சட்டவிரோதமாக எடுத்தனர் என்பது குறித்து விரிவான தகவல்களையும் அமலாக்கத்துறை தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. மேலும் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை விட 10 முதல் 30 மடங்கு அதிகமாக மணல் எடுத்துள்ளனர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஒரே இடத்தில் 4.9 ஹெக்டேரில் மணல் எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. மொத்தம் ஐந்து மாவட்டங்களில் 190 ஹெட் பரப்பளவில் 28 இடங்களில் மணல் எடுக்க குத்தகைதாரர்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக 987 ஹெக்டேரில் மணல் கொள்ளை

 இந்த நிலையில் சட்ட விரோதமாக 987 ஹெக்டேர் பரப்பளவுக்கு மணல் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது அமலாக்கத்துறை தங்கள் நடத்திய பல்வேறு விஞ்ஞான பூர்வ ஆய்வுகள் மூலம் இந்த முறைகேடுகளை உறுதி செய்து இருப்பதாகவும் குறிப்பாக செயற்கைக்கோள் படங்கள் ஆளில்லா விமானங்கள் எடுக்கப்பட்ட படங்கள் மூலமாகவும் இதை உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மணல் எடுக்க 273 மணல் அல்லும் எந்திரங்கள் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது உள்ளிட்ட பல விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது இந்த மணல் கொள்ளை மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது அதே நேரத்தில் மணல் ஒப்பந்ததாரர்கள் குறிப்பிடத்தக்க பெரிய லாபத்தை அடைந்துள்ளனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது

அறிவியல் பூர்வ ஆய்வு

தமிழக அரசு நீர்வளத்துறை அனுமதி அளித்துள்ள குவாரிகளில் மணல் கொள்ளை நடந்துள்ளது. இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் குவாரிகளில் மணல் எடுக்க அனுமதி பெற்ற ஒப்பந்ததாரர்கள் புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் உள்ளிட்டோர் வீடுகள், அலுவலகங்களில் நடத்திய சோதனை முடிவில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அதன் அடிப்படையில் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஐஐடி நிபுணர்கள் உதவியுடன் அறிவியல் பூர்வமாக எந்த ஆழத்திற்கு எவ்வளவு மணல் அள்ளப்பட்டது என ஆய்வு நடத்தப்பட்டது. தொடர் விசாரணையில் அரசு 490 ஏக்கர் அளவுக்கு மணல் அள்ள அனுமதி அளித்துள்ள நிலையில் 2,450 ஏக்கர் அளவுக்கு மணல் அள்ளப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.