ADMK Vs BJPஅரசியல் பரபரப்புகளுக்கு இடையே எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு- அதிமுக மறியல்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Admk Vs Bjpஅரசியல் பரபரப்புகளுக்கு இடையே எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு- அதிமுக மறியல்!

ADMK Vs BJPஅரசியல் பரபரப்புகளுக்கு இடையே எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு- அதிமுக மறியல்!

Pandeeswari Gurusamy HT Tamil
Sep 28, 2023 12:09 PM IST

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சி ரவுண்டானாவில் உள்ள பேருந்து நிலையம் எதிரே அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் சிலைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் காவித் துண்டு மற்றும் கையில் காவி துணி போட்டு சென்றதால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டது.

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்

ஏற்கனவே அதிமுக பாஜக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இனி எந்த சூழலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என கே.பி. முனுசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதற்கிடையில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சி ரவுண்டானாவில் உள்ள பேருந்து நிலையம் எதிரே அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் சிலைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் காவித் துண்டு மற்றும் கையில் காவி துணி போட்டு சென்றதால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டது. 

இந்த சம்பவத்தை கண்டித்து அப்பகுதியில் அதிமுக தொண்டர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். 

இதையடுத்து எம்ஜிஆர் சிலையில் போடப்பட்டிருந்த காவி துண்டை காவல் துறையினர் நீக்கி உள்ளனர். இதையடுத்து காவல் துறையினர் காவி துண்டை போட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.