’முதியோர் உதவித்தொகை தருவதால் எனக்கு புண்ணியம்’! KKSSR பேரவையில் உருக்கம்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’முதியோர் உதவித்தொகை தருவதால் எனக்கு புண்ணியம்’! Kkssr பேரவையில் உருக்கம்

’முதியோர் உதவித்தொகை தருவதால் எனக்கு புண்ணியம்’! KKSSR பேரவையில் உருக்கம்

Kathiravan V HT Tamil
Apr 12, 2023 03:23 PM IST

முதியோர் உதவித் தொகை நீக்கப்பட்ட 3 லட்சம் பேரில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு திருப்பி கொடுத்துவிட்டோம் - கே.கே.எஸ்.எஸ்.ஆர். பேரவையில் விளக்கம்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

அதில், வேறு துறைகளுக்கும் வருவாய்த்துறைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. வருவாய்த்துறையை பொறுத்தவரை எல்லாத்துறைகளோடு ஒட்டிப்போகின்ற துறை.

35 லட்சம் பேருக்கு முதியோர் உதவித் தொகை கொடுக்க வேண்டும். இந்த முறை புள்ளி விவரத்துறையில் கொடுத்த கணிக்கில் நிறைய சொத்துக்கள் வாங்கியவர்கள், இரண்டு பென்ஷன் வாங்கியவர்கள், இறந்தவர்கள் என்று சொல்லி மூன்று லட்சம் பேரை நீக்கிவிட்டார்கள். நீக்கப்பட்ட 3 லட்சம் பேரில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு திருப்பி கொடுத்துவிட்டோம். தற்போது மொத்தமாக 36 லட்சம் பேருக்கு கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கிராமபுறங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள முதியோருக்கு உதவித் தொகை வழங்க சட்டம் உள்ளது இதன்படி பஞ்சாயத்து அலுவலகங்களில் உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல் அடிப்படையில் முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டது ஆனால் அவை 15 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட பட்டியல்.

இது தொடர்பாக ஏதெனும் சிரமங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். முதியோருக்கு உதவித் தொகைக்கு ஏற்பாடு செய்தால் உங்களுக்கு எப்படி புண்ணியம் கிடைக்கிறதோ அதே புண்ணியம் எனக்கும் முதலமைச்சருக்கும் கிடைக்கும் என்பதால் அதில் நாங்கள் சுணக்கே பார்ப்பது கிடையாது.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.