Breaking News: ’சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு இடஒதுக்கீடு பொருந்தாது’ சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Breaking News: ’சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு இடஒதுக்கீடு பொருந்தாது’ சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Breaking News: ’சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு இடஒதுக்கீடு பொருந்தாது’ சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Kathiravan V HT Tamil
Oct 02, 2023 03:21 PM IST

”இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி இடஒதுக்கீடு என்பது சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது”

சிறுபான்மை அந்தஸ்தை ரத்து செய்ததை எதிர்த்து எஸ்.ஐ.இ.டி கல்லூரி நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
சிறுபான்மை அந்தஸ்தை ரத்து செய்ததை எதிர்த்து எஸ்.ஐ.இ.டி கல்லூரி நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை தேனாம்பேட்டையில் இயங்கி வரும் எஸ்.ஐ.இ.டி மகளிர் கல்லூரி நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் கடந்த 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையில், சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் 50 சதவீதத்திற்கு மேலாக சிறுபான்மையினர் மாணவர்களை சேர்க்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை எஸ்.ஐ.இ.டி கல்லூரி நிர்வாகம் மீறியதாக கூறி சிறுபான்மை கல்வி நிறுவனம் என்ற அந்தஸ்தை ரத்து செய்து உயர்க்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.

உயர்க்கல்வித்துறையின் இந்த உத்தரவை எதிர்த்தும், தமிழ்நாடு அரசின் அரசாணையை எதிர்த்தும் எஸ்.ஐ.இ.டி கல்லூரி நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆணைய சட்டத்தின்படி கல்வி நிறுவனங்களில் சிறுபான்மையினர் அந்தஸ்து குறித்து முடிவெடுக்க அந்த அமைப்புக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதால் இதில் மாநில அரசு தலையிட முடியாது எனக்கூறி உயர்க்கல்வித்துறையின் உத்தரவை ரத்து செய்தனர்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி இடஒதுக்கீடு என்பது சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது. 50 சதவீத இடங்களில் சிறுபான்மையினரை சேர்த்துக் கொள்ளலாம் அதற்கு மேற்பட்டு சேர்க்க கூடாது என்ற உத்தரவை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.