Prashanth: ஹெல்மெட் போடாமல் ப்ரோமோஷன் செய்த பிரசாந்த்.. ஆப்பு வைத்த சென்னை போலீஸ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Prashanth: ஹெல்மெட் போடாமல் ப்ரோமோஷன் செய்த பிரசாந்த்.. ஆப்பு வைத்த சென்னை போலீஸ்

Prashanth: ஹெல்மெட் போடாமல் ப்ரோமோஷன் செய்த பிரசாந்த்.. ஆப்பு வைத்த சென்னை போலீஸ்

Aarthi Balaji HT Tamil
Aug 02, 2024 07:31 AM IST

Prashanth: வாகனம் ஓட்டிய பிரசாந்தும், பின்னால் அமர்ந்து இருந்த தொகுப்பாளரும் ஹெல்மெட் போடவில்லை. இந்த பேட்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

ஹெல்மெட் போடாமல் ப்ரோமோஷன் செய்த பிரசாந்த்.. ஆப்பு வைத்த சென்னை போலீஸ்
ஹெல்மெட் போடாமல் ப்ரோமோஷன் செய்த பிரசாந்த்.. ஆப்பு வைத்த சென்னை போலீஸ்

இதையடுத்து கடந்த சில நாள்களுக்கு முன்னர் படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என தகவல்கள் உலா வந்தன.

பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தபு, ஆயுஷ்மான் குர்ரானா, ராதிகா ஆப்தே நடித்து வெளியான அந்தாதூன் படத்தின் ரீமேக் தான் அந்தகன்.

ரீமேக் படம்

க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவான இந்த படம் ஏற்கனவே தெலுங்கில் மேஸ்ட்ரோ, மலையாளத்தில் பிரம்மம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி  உள்ளது.

இந்த படங்களை தொடர்ந்து தற்போது தமிழிலும் உருவாகியிருக்கிறது. தமிழில் தபு கதாபாத்திரத்தில் சிம்ரனும், ஆயுஷ்மான் குர்ரானா கதாபாத்திரத்தில் பிரசாந்தும், ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் ப்ரியா ஆனந்தும் நடித்துள்ளார்கள். கார்த்திக் முக்கியத்துவம் மிக்க கேரக்டரில் நடித்து உள்ளார்.

பார்வையற்ற இசை கலைஞராக பிரசாந்த்

வனிதா விஜயகுமார், சமுத்திரகனி, ஊர்வசி, யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்பட பலரும் நடித்துள்ளார்கள்.

பார்வையற்ற இசை கலைஞராக வரும் பிரசாந்த் தன்னை அறியாமலேயே ஒரு கொலையில் சிக்கி கொள்ள அதன் பின்னர் நடக்கும் திருப்பங்கள் தான் படத்தின் கதை என கூறப்படுகிறது.

க்ரைம் த்ரில்லருக்கு ஏற்றார் போல் படத்தின் ட்ரெய்லரும் விறுவிறுப்பான காட்சிகளுடன் அமைந்துள்ளது. இப்படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் விளம்பர பணியில் படக்குழு மிகவும் தீயாக வேலை செய்து வருகிறார்கள். அதன் படி சமீபத்தில் பிரசாந்த் படத்தின் விளம்பர பணியில் ஈடுபட்டு உள்ளார்.

ஹெல்மெட் போடவில்லை

இந்நிலையில் வாகனம் ஓட்டிய பிரசாந்தும், பின்னால் அமர்ந்து இருந்த தொகுப்பாளரும் ஹெல்மெட் போடவில்லை. இந்த பேட்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இதனையடுத்து சாலையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற பிரசாந்த் மற்றும் அவரிடம் பேட்டி எடுத்த தொகுப்பாளர் என இரண்டு பேருக்கு சென்னை போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் விதித்து உள்ளனர்.

அதன் படி, ரூ. 2000 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. பிரபலங்கள், பொது மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய சூழலில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது நியாயமே இல்லை என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு

“ சமீப காலமாக நானே ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு செய்து இருக்கிறேன். நிறைய மாவட்டங்களுக்கு சென்று செய்து இருப்பதை நீங்களும் பார்த்து இருப்பீர்கள். தயவு செய்து ஹெல்மெட் அணிந்து வாகனம் இயக்குங்கள். 5 நிமிடம் முன்பாகவே கிளம்பி வாகனத்தை பாதுகாப்பாக இயக்க வேண்டும் " என்றார். 

ஆனால் கடைசி வரை தான் எதனால் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை இயக்கினேன் என்பதை மட்டும் அவர் தெளிவுப்படுத்தவே இல்லை. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.