Top 10 News: கால்பந்து திடல்கள் விவகாரம்: முடிவை திரும்பப் பெறுகிறது சென்னை மாநகராட்சி, 4 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை
"சென்னையில் உள்ள 9 கால்பந்து செயற்கை புல் விளையாட்டுத் திடல்கள் கட்டணம் ஏதுமின்றி பயன்பாட்டுக்குத் தொடரும்" என மேயர் பிரியா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் டாப் 10 பிற்பகல் செய்திகளைப் பார்ப்போம்.
Top 10 News: கால்பந்து திடல்கள் விவகாரம்: முடிவை திரும்பப் பெறுகிறது சென்னை மாநகராட்சி, 4 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை
மதுரை செல்லூர் கண்மாயிலிருந்து நீர் வெளியேற ரூ.11.9 கோடி மதிப்பீட்டில் பணிகள் உடனடியாக மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் டாப் 10 செய்திகளைப் பார்ப்போம்.
- தீபாவளி பண்டிகையையொட்டி ஆவின் நிறுவனம் மூலம் இதுவரை சுமார் 115 கோடி இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட 10 கோடி அதிகமாக விற்பனையாகியுள்ளதாக நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
- விழுப்புரத்தில் ஆம்னி பேருந்தின் டீசல் டேங்கில் ஓட்டை விழுந்து சாலையில் 400 லிட்டர் டீசல் ஆறாக ஓடியது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீப்பற்றாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக டீசலின்மீது நுரையை பீய்ச்சி அடித்தனர்.
சென்னையை குளிர்வித்த மழை
- அண்ணாநகரில் ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னை அண்ணாநகர், வில்லிவாக்கம், பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 1 மணி நேரமாக கனமழை பெய்தது. நேற்று வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் கனமழை எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் (பகல் 1-3 மணி) பலத்த மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
- "சென்னையில் உள்ள 9 கால்பந்து செயற்கை புல் விளையாட்டுத் திடல்கள் கட்டணம் ஏதுமின்றி பயன்பாட்டுக்குத் தொடரும்" என மேயர் பிரியா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
புறநகர் ரயில்கள்
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாளை அக்.31 புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளிிட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - சூளூர்பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கங்களில் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 1600 ஏக்கர் பரப்பளவு கொண்ட சென்னை கிண்டி மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதிகளை சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து தீர்மானம் நிறைவேற்றம். சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனம் (SIDCO) வசமிருந்த சாலை, தெருவிளக்கு, வடிகால் பராமரிப்பு ஆகிய பணிகளை மாநகராட்சியே இனி மேற்கொள்ளும்.
- தொழில் நிறுவனங்கள் நிறைந்த திருப்பூரில் வெளியூர் தொழிலாளர்களுக்கு இன்று முதல் தீபாவளி விடுமுறை விடப்பட்டதால் குடும்பத்துடன் அவர்கள் சொந்த ஊருக்கு சென்ற நிலையில், பெரும்பாலான பள்ளிகளில் இன்று மிகக்குறைந்த அளவிலேயே மாணவர்கள் வருகை.
- பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை போற்றக்கூடிய செயல்களையும் திட்டங்களையும் தொடர்ந்து செய்வோம். தேவர் ஜெயந்தி தினத்தை ஒட்டி பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார்.
- "ஒரு மாநாடு தானே முடிஞ்சிருக்கு.. இன்னும் பல நாட்கள் அவங்க உழைக்கணும்!" என தவெக மாநாடு குறித்து தேமுதிகவின் விஜயபிரபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
- அஜித்குமார் ரேசிங்' அணி மூலமாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் நடிகர் அஜித்குமாருக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நன்றி தெரிவித்துள்ளார்.
- தீபாவளியை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சுங்கச்சாவடி அருகே ஆய்வில் ஈடுபட்ட அதிகாரிகள், கூடுதல் கட்டணம் வசூலித்த பேருந்துகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
டாபிக்ஸ்
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.