Thoothukudi Floods: ‘விரைவில் தாமிரபரணியில் தடுப்பணையா?’ அமைச்சர் எ.வ.வேலு பதில்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Thoothukudi Floods: ‘விரைவில் தாமிரபரணியில் தடுப்பணையா?’ அமைச்சர் எ.வ.வேலு பதில்!

Thoothukudi Floods: ‘விரைவில் தாமிரபரணியில் தடுப்பணையா?’ அமைச்சர் எ.வ.வேலு பதில்!

Kathiravan V HT Tamil
Dec 25, 2023 09:29 PM IST

”வரலாறு காணாத பெய்த மழையினால், நாகர்கோவில்-5, விருதுநகர்-13, தென்காசி-13, தூத்துக்குடி-113 மற்றும் திருநெல்வேலியில்-44 சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்து செல்லப்பட்டது”

வெள்ளம் பாதித்த தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்பு பணிகளை பார்வையிடும் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு
வெள்ளம் பாதித்த தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்பு பணிகளை பார்வையிடும் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு

முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில், தமிழ்நாட்டில் உள்ள தரைப்பாலங்களை எல்லாம் உயர்மட்ட பாலங்களாக தரம் உயர்த்த வேண்டும் என்று அறிவித்தார்கள். அந்த அறிவிப்பின்படி, தற்போது, தமிழ்நாட்டில் உள்ள 1127 தரைப்பாலங்களை எல்லாம் உயர்மட்டப் பாலங்களாக கட்டப்பட்டு வருகிறோம். இதில், இந்த தரைப்பாலமும் அடங்கும். இந்த தரைப்பாலத்தை, உயர்மட்டப்பாலமாக கட்ட ரூ.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஒப்பந்தம் கோரப்பட்டு, கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்.

தாமிரபரணி ஆற்றில் செக்டேம் கட்டுவது என்பது இருவேறு கருத்துகள் உள்ளது. ஆனால், தாமிரபரணி ஆற்றின் கரையை உயர்த்த வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது.

நான்கு மாவட்டங்களில் பழுதடைந்த சாலைகள் மற்றும் பாலங்களை நிரந்தரமாக சீரமைக்க திட்டமதிப்பீடு தயார் செய்து, மூன்று தினங்களுக்குள் தெரிவிக்குமாறு, நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் சந்திரசேகர் அவர்களிடம் தெரிவித்துள்ளேன். மாஞ்சோலை மலை கிராமத்திற்கு சாலை அமைக்க, வனத்துறையிடம் ஒப்புதல் பெற்றவுடன், சாலை அமைக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.