IIT Madras: ‘டார்ச்சர் எதிரொலி! சென்னை ஐஐடியில் ஆய்வு மாணவர் தற்கொலை!’ பேராசிரியர் இடைநீக்கம்!
”IIT Madras: கடந்த மார்ச் மாதம் 31 வயதான பிஹெச்டி ஆய்வு மாணவர் சச்சின் குமார் ஜெயின் என்பவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது மரணத்திற்கு அவரது பிஹெச்டி வழிகாட்டியாக இருந்த பேராசிரியர் ஆஷிஷ் மட்டுமே காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டி இருந்தனர”

தற்கொலை செய்து கொண்ட மாணவர் சச்சின் குமாரின் அடையாள அட்டை - பேராசிரியர் ஆஷிஷ் குமார்
சென்னை ஐஐடியில் சச்சின்குமார் ஜெயின் என்ற ஆராய்ச்சி மாணவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பேராசிரியர் ஆஷிஷ் குமார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 31 வயதான பிஹெச்டி ஆய்வு மாணவர் சச்சின் குமார் ஜெயின் என்பவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது மரணத்திற்கு அவரது பிஹெச்டி வழிகாட்டியாக இருந்த பேராசிரியர் ஆஷிஷ் மட்டுமே காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டி இருந்தனர்.
இந்த மரணம் தொடர்பாக விசாரிக்க, முன்னாள் காவல்துறை இயக்குநர் திலகவதி ஐபிஎஸ், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் சபிதா, கண்ணகி பாக்கியநாதன், பேராசிரியர் ரவீந்திர கிட்டு, மாணவர் பிரதிநிதி அமல் ஆகியோரை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டது.
