MK Stalin: வெளிநாட்டுக்கு முதலீடு செய்ய சென்றேனா? ‘அது பழனிசாமியின் புத்தி’ சென்னை திரும்பிய முதல்வர் காட்டம்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Mk Stalin: வெளிநாட்டுக்கு முதலீடு செய்ய சென்றேனா? ‘அது பழனிசாமியின் புத்தி’ சென்னை திரும்பிய முதல்வர் காட்டம்

MK Stalin: வெளிநாட்டுக்கு முதலீடு செய்ய சென்றேனா? ‘அது பழனிசாமியின் புத்தி’ சென்னை திரும்பிய முதல்வர் காட்டம்

Kathiravan V HT Tamil
May 31, 2023 11:19 PM IST

இப்போது உள்ள பாஜக ஆட்சியை பொறுத்தவரை வருமானவரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறையை பயன்படுத்தி பழிவாங்குவது, அச்சுறுத்துவது பல மாநிலங்களில் நடப்பது தற்போது தமிழ்நாட்டில் தொடங்கி உள்ளது.- முதல்வர் ஸ்டாலின்

சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளின் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பு
சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளின் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பு

தமிழ்நாட்டுக்கும் ஜப்பானுக்கும் கடந்த சில ஆண்டுகளில் பொருளாதார ரீதியாக நல்லுறவை பெறக்கூடிய வகையில் இந்த பயணம் அமைந்தது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட மிக்கப்பெரிய திட்டங்களான மெட்ரோ, ஒகேனேக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் ஜப்பான் பங்கு உள்ளதை நீங்கள் அறிவீர்கள். ஆக உற்பத்தி துறையில் உலகிற்கே முன்னோடியாக விளங்குவது ஜப்பான் நாடு, அதே நேரத்தில் ஆசியாவின் மிகப்பெரிய தொழில் மையமாக தமிழ்நாடு உருவெடுக்க வேண்டும் என்பதுதான் திமுக அரசின் குறிக்கோள்.

இதற்காக தொழில் முதலீடுகள் ஈர்க்க ஏற்கெனவே தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு ஜப்பானுக்கு சென்று ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினார். குறைந்தபட்சம் 3 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டோம்.

அந்த வகையில் முந்தைய தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களும், இன்றைய தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்களும் தொழில்துறை அலுவர்களும் முனைப்பாக செயல்பட்டு ஜப்பான் நிறுவனங்களுன் பேச்சுவார்த்தை நடத்தி 1891 கோடி முதலீட்டில் குளிர்சாதன கருவிகள் உற்பத்தி செய்வதற்கான புதிய தொழிற்சாலையை மிட்சுமிட்சி நிறுவனம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கெனவே சென்னையில் என் முன் கையெழுத்தானது.

அதையொட்டி ஐ.பி நிறுவனம் 312 கோடி ரூபாய், டைசல் நிறுவனம் 83 கோடி ரூபாய், கியோ குட்டா நிறுவனம் 113.9 கோடி ரூபாய், மிட்சுமிசா இந்தியா 155 கோடி ரூபாய், பாலி ஹோஸ்டோபீல் 150 கோடி, பாலியோஸ் கோஹே 200 கோடி, பாலியோஸ் சட்டோ ஹோஜி 200 கோடி, ஓம்ரான் ஹெல்த்கேர் 128 கோடி ரூபாய் என 3233 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதுமட்டுமின்றி சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன மேம்பாட்டிற்கும், தொழிற்கல்வி வளர்ச்சிக்கும், உயர்க்கல்வி திறன் பயிற்சிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது மேலும் பல முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள சிங்கப்பூர், ஜப்பான் நிறுவனங்கள் முனைப்போடு உள்ளது எங்களுக்கு தெரிய வந்துள்ளது.

வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி 10 மற்றும் 11 தேதிகளில் சென்னையில் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளேன்.

கேள்வி:-முதல்வரின் வெளிநாட்டு பயணம் முதலீட்டுகளை ஈர்க்கவா? அல்லது முதலீடு செய்யவா? என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பி உள்ளாரே?

அது பழனிசாமியின் புத்தி; தன்னை போலவே எல்லோரும் இருப்பார்கள் என அவர் கருதி இருக்கிறார்.

கேள்வி:-மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் கூறி உள்ளாரே?

இது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார். அதில் நாங்கள் உறுதியாக இருப்போம்.

கேள்வி:-நாடாளுமன்றத்தில் செங்கோல் வைத்துள்ளது தமிழ்நாட்டின் பெருமைதானே?

உண்மையான சோழர் செங்கோலாக இருந்தால் தமிழ்நாட்டிற்கு பெருமை ஆனால் அது இல்லை என்று சில வரலாற்று அறிஞர்களே சொல்லி வருகிறார்கள். செங்கோல் வாங்கிய அன்றே செங்கோல் வளைந்துவிட்டது. அதற்கு உதாரணம்தான் இந்தியாவிற்கு புகழ் ஏற்படுத்தி கொடுத்த மல்யுத்த வீராங்கனைகள் எல்லாம் அடித்து உதைத்து கைது செய்த காட்சிகளே சாட்சி. 

கேள்வி:- செந்தில் பாலாஜி தொடர்புடையவர்கள் இடங்களில் ஐ.டி. ரெய்டு நடந்துள்ளதே?

இப்போது உள்ள பாஜக ஆட்சியை பொறுத்தவரை வருமானவரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறையை பயன்படுத்தி பழிவாங்குவது, அச்சுறுத்துவது பல மாநிலங்களில் நடப்பது தற்போது தமிழ்நாட்டில் தொடங்கி உள்ளது.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.