Ooty and Kodaikanal E-Pass : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் வழங்கும் நடைமுறை நீட்டிப்பு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ooty And Kodaikanal E-pass : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் வழங்கும் நடைமுறை நீட்டிப்பு!

Ooty and Kodaikanal E-Pass : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் வழங்கும் நடைமுறை நீட்டிப்பு!

Divya Sekar HT Tamil
Jun 28, 2024 04:26 PM IST

Ooty and Kodaikanal E-Pass : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் வழங்கும் நடைமுறையை வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் வழங்கும் நடைமுறை நீட்டிப்பு!
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் வழங்கும் நடைமுறை நீட்டிப்பு!

மேலும் அபராதம் விதிக்கும் நடைமுறையை கொடைக்கானலிலும் பின்பற்ற வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம். நிறுவனங்கள் ஆய்வு செய்து வருவதாகவும், இ பாஸ் முறையை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கலாம் என அரசு தரப்பு வாதிட்டது.

இ பாஸ் வழங்கும் நடைமுறை நீடிப்பு

ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இ பாஸ் வழங்கும் நடைமுறையை வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு, ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம். நிறுவனங்கள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் வரை, ஊட்டி, கொடைக்கானலில் மே 7 ம்தேதி முதல் ஜூன் 30 ம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு இ பாஸ் முறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இ பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது குறித்து நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

மூன்று மாதங்க்ளுக்கு நீட்டிக்கலாம்

தமிழக அரசு தரப்பில் ஆஜராகியிருந்த தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம். நிறுவனங்கள் ஆய்வு செய்து வருவதாகவும், இ பாஸ் முறையை மேலும் மூன்று மாதங்க்ளுக்கு நீட்டிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இ பாஸ் நடைமுறையை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டனர்.

இதற்கிடையில், நீலகிரி மாவட்டத்துக்கு பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு செல்வோருக்கு ஒரு பாட்டிலுக்கு 20 ரூபாய் அபராதம் விதிக்கப்படக்கூடிய நிலையில், கொடைக்கானலில் எந்த அபராதமும் விதிக்கப்படுவதில்லை என நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு

இதையடுத்து, அபராதம் விதிக்கும் நடைமுறையை கொடைக்கானலிலும் பின்பற்ற வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் வசூலிக்கப்படும் சுற்றுச்சூழல் வரி எந்த வகையில் செலவழிக்கப்படுகிறது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.