HBD Pammal Sambandha Mudaliar: ’சபாபதி திரைப்படம் தெரியும்! பம்மல் சம்பந்த முதலியாரை தெரியுமா?
”தமிழின் முதல் முழுநீல காமெடி படமான சபாபதி திரைப்படம், பம்மல் சம்மந்த முதலியாரின் நாடகம் ஆகும்”
"நவீன தமிழ் நாடகத்தின் தந்தை" என்று வர்ணிக்கப்படும் பம்மல் விஜயரங்கம் சம்பந்தம் முதலியார், நாடக ஆசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என பன்முக தன்மை கொண்டவர். இவரது கலைச்சேவைகளை பாராட்டி மத்திய அரசு பத்மபூஷண் விருது வழங்கி உள்ளது.
பிறப்பும் படிப்பும்
பம்மல் சம்பந்த முதலியார் 1873 ஆம் ஆண்டு பிபரவரி ஒன்றாம் தேதி அன்று சென்னைக்கு அருகிலுள்ள பம்மலில் விஜயரங்க முதலியார் மற்றும் மாணிக்க வேலம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். பச்சையப்பன் கல்லூரியில் கல்வி பயின்றார். பின்னர் வழக்கறிஞராக உயர்ந்தார்.
பெரிய நூலகம் வைத்திருந்த தந்தையாலும், மகனுக்குப் புத்தக மோகம் ஏற்பட்டதாலும், தாய் நாட்டுப்புறக் கதைகள், இந்தியக் காவியங்கள் சொல்வதாலும் ஈர்க்கப்பட்ட முதலியார் சிறுவயதிலேயே நாடகத்தில் ஆர்வம் காட்டினார்.
நாடகம் ஒரு இழிவான சூழலாகக் கருதப்பட்ட நேரத்தில் அவரது தந்தையும் நாடகங்களைப் பார்க்க அவரை ஊக்குவித்தார். குறிப்பாக பிரபல ஆங்கில இலக்கியவாதியான வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதிய படைப்புகளை சிறுவயதில் படித்ததால், அவரால் ஆரம்ப காலத்திலேயே நாடகங்களை எழுதினார்.
பம்மல் சம்பந்த முதலியாரின் படைப்புகளில் ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத நாடகங்களின் தழுவல்களும், அசல் வெளியீடுகளும் அடங்கும். இவை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டன. படித்தவர்கள் நாடகத்தின் மீது தங்கள் கவனத்தைத் திருப்பினர். சிலர் சபாவில் சேர்ந்து நடிக்கத் தொடங்கினர். இது பெரும் தார்மீக மற்றும் கல்வி மதிப்புடைய மையமாக மாறியது. உரைநடை முக்கியத்துவம் பெற்றது, யதார்த்தமான நடிப்பு வலியுறுத்தப்பட்டது.
மேடை மரபுகளை மாற்றி, புதிய செட்களையும், காட்சிகளையும் உருவாக்கி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
இவர் தனது சொந்த நாடகங்கள் பலவற்றில் கதாநாயகனாக நடித்தார். அதைத் தொடர்ந்து, மற்ற சபாக்கள் அல்லது குழுக்கள் தங்கள் சொந்த பதிப்புகளைத் தயாரித்தன. 1895 இல் அவரது லீலாவதி-சுலோச்சனா, 1907 இல் வெளியான மனோகம், 1910 இல் வெளியிடப்பட்ட ஷேக்ஸ்பியரின் மேக்பெத், 1918 இல் வெளியிடப்பட்ட சபாபதி ஆகியவை உரைநடை உரையாடலில் முதல் தமிழ் நாடகங்களாகும், மற்றவர்கள் புராண இசைகளை நிகழ்த்தினர். நாடகத்தில் கதைக்கும் அழகியலுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்தார்.
மூன்று மணி நேரத்திற்குள் நிகழ்த்தக்கூடிய திரைக்கதைகளை அவர் இயற்றினார். 1908 ஆம் ஆண்டில் யயாதி, 1910 ஆம் ஆண்டில் ஹர்ஷாவிலிருந்து ரத்னவாலி மற்றும் மேலே குறிப்பிட்ட படைப்புகள் சில பின்னர் திரைப்படமாக்கப்பட்டன.
தமிழின் முதல் முழுநீல காமெடி படமான சபாபதி திரைப்படம், பம்மல் சம்மந்த முதலியாரின் நாடகம் ஆகும். அவரது நாடகத்தை ஏவிஎம் நிறுவனம் திரைப்படமாக தயாரித்து வெளியிட்டது. இந்த திரைப்படத்தில் வரும் நகைச்சுவை காட்சிகள் இன்று வரை யூடியூப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் மிகப்பிரபலம்.
வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக 1961ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி தமது 91ஆம் வயதில் காலமானார்.
ஒரு சமூகத்திற்கு கலை எந்த அளவுக்கு முக்கியம் என்பது அனைவரும் அறிந்ததே! அந்த வகையில் மாபெரும் கலைஞர் பம்மல் சம்பந்த முதலியாரை அவரது நினைவு நாளில் நினைவில் கொள்வோம்.
டாபிக்ஸ்