தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ops Meets Amit Shah: மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் ஒபிஎஸ்!

Ops Meets Amit Shah: மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் ஒபிஎஸ்!

Divya Sekar HT Tamil
Nov 12, 2022 09:46 AM IST

ஓ.பன்னீர் செல்வம் இன்று பிற்பகல் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் ஒபிஎஸ்
மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் ஒபிஎஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று சென்னையில் நடைபெறும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன விழாவில் கலந்து கொள்கிறார். இந்நிலையில், திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொண்ட பிரதமர் மோடியை இபிஸ் மற்றும் ஓபிஎஸ் சந்தித்தனர்.

இன்று அமித்ஷாவையும் இருவரும் சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், அமித்ஷாவை இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இன்று சந்திக்க இருப்பது உறுதியாகி உள்ளது. அதன்படி, இன்று காலை 11.05 மணிக்கு ராஜ்பவனில் இருந்து கார் மூலம் புறப்பட்டு வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்திற்கு 11.25 மணிக்கு வருகிறார்.

அங்கு காலை 11.30 மணி முதல் பிற்பகல் 12.50 வரை நடக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் 75ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசுகிறார். அதன் பின்னர் மாலை 3 மணியளவில் சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாயத்துக்கு அமித்ஷா செல்கிறார்.

கமலாலயத்தில் தமிழ்நாடு பாஜக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கும் அமித்ஷா, மாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்ல உள்ளார்.

இதனிடையே மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் இருந்து நேரம் கேட்கப்பட்டது. அதன்படி, இன்று பிற்பகல் ஓ.பன்னீர் செல்வம், மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்