யாருக்கெல்லாம் தொடர்பு.. போதை கடத்தல் மன்னன் ஜாஃபர் சாதிக் வாக்குமூலம்.. என் சி பி அதிகாரி சொன்ன அதிர்ச்சி தகவல்!
Jaffer Sadiq: ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் தேடப்பட்டு வந்த ஜாஃபர் சாதிக் ஜெய்ப்பூரில் தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரிடம் டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Drugs Smuggling Case: ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு திரைத்துறை சார்ந்த பிரபலங்களுக்கும் இந்த போதைப்பொருள் கடத்தலில் தொடர்பிருப்பதாக ஜாஃபர் சாதிக் வாக்குமூலம் அளித்துள்ளதாக என்சிபி அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் பல கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட போதைப்பொருள் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக சென்னையை சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோக்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதைப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் 50 கிலோ வேதிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.2,000 கோடி.
இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்டஅயலக அணி துணை அமைப்பாளருமான ஜாஃபர் சாதிக் என்று குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, திமுகவில் இருந்து அவர் நிரந்தமாக நீக்கப்பட்டார். ஜாபர் சாதிக் நேரில் ஆஜர் ஆக வேண்டும் என சென்னை மயிலாப்பூரில் உள்ள அருளானந்தம் தெருவில் உள்ள அவரது வீட்டில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டிவிட்டு சென்றனர்.
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அன்று ஜாஃபர் சாதிக் ஆஜர் ஆக வேண்டிய நிலையில், இதுவரை ஆஜராகமல் தலைமறைவாக இந்து வந்தார். இந்த நிலையில், ஜெய்ப்பூரில் தலைமறைவாக இருந்த ஜாஃபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளதாக என்சிபி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது என்சிபி அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், தமிழ்நாடு திரைத்துறை சார்ந்த பிரபலங்களுக்கும் போதைப்பொருள் கடத்தலில் தொடர்பிருப்பதாக ஜாஃபர் சாதிக் வாக்குமூலம் அளித்துள்ளதாக என்சிபி அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த அதிகாரி கூறுகையில், "தமிழ்நாடு திரைத்துறை சார்ந்த பிரபலங்களுக்கும் தொடர்பிருப்பதாக ஜாஃபர் சாதிக் வாக்குமூலம் அளித்துள்ளார். விசாரணைக்கு பிறகு, போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய திரைப்பிரபலங்களின் பெயர்கள் வெளியிடப்படும் அரசியல், திரைத்துறை, கட்டுமானத்துறையில் உள்ள முக்கிய புள்ளிகளுக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் ஜாஃபர் சாதிக் வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. பாலிவுட் திரைத்துறையினருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் உடன் தமிழக டிஜிபி சங்கர்ஜிவால் இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆனது. இந்த நிலையில், இது தொடர்பாக அவர் அளித்திருந்த விளக்கத்தில், தாம் சென்னை மாநகர காவல் அணையராக இருந்தபோது 10 சிசிடிவி கேமிராக்களை ஜாபர் சாதிக் ஸ்பான்சர் செய்தார். போதை பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது என்று தெரிந்தது, சிசிடிவி கேமராக்களை நிறுத்தி விட்டோம். ஜாபர் சாதிக்கிற்கு தாம் கொடுத்தது விருது அல்ல என்றும், அது வெறும் பரிசுப்பொருள்தான் என்றும் சங்கர் ஜிவால் கூறியது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்