Ramanathapuram: ராமநாதபுரம் ஆட்சியரை கீழே தள்ளிவிட்ட எம்.பியின் உதவியாளர் கைது!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ramanathapuram: ராமநாதபுரம் ஆட்சியரை கீழே தள்ளிவிட்ட எம்.பியின் உதவியாளர் கைது!

Ramanathapuram: ராமநாதபுரம் ஆட்சியரை கீழே தள்ளிவிட்ட எம்.பியின் உதவியாளர் கைது!

Kathiravan V HT Tamil
Jun 18, 2023 02:43 PM IST

கைது செய்யப்பட்ட தனது உதவியாளருக்கு ஆதரவாக எம்.பி நவாஸ்கனி சமாதான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளிகியாகி உள்ளது.

ராமநாதபுரத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் - எம்.பி நவாஸ்கனி இடையே ஏற்பட்ட மோதல்
ராமநாதபுரத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் - எம்.பி நவாஸ்கனி இடையே ஏற்பட்ட மோதல்

ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் முதலமைச்சர் கோப்பையில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் நிகழ்சிக்கு நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் ராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சி பிற்பகல் 3 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என்று அழைப்பிதழில் போடப்பட்டு அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு பிற்பகல் 2.55 மணிக்கு நவாஸ்கனி எம்.பி வந்தபோது ஏற்கெனவே நிகழ்ச்சி நடத்தி முடிக்கப்பட்டதை அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்தார்.

இதனால் கோபம் அடைந்த நவாஸ் கனி எம்.பி, அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது இருவரையும் சமாதானம் செய்ய முயற்சிக்கும் ஆட்சியர் விஷ்ணு சந்திரனை நவாஸ்கனி எம்.பியின் உதவியாளர் விஜயராமு கீழே தள்ளிவிடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆனது.

மாவட்ட ஆட்சியரை தள்ளிவிட்டவரை உடனடியாக கைது செய்யவிட்டால் அரசு நிகழ்ச்சிகளில் யாரும் கலந்து கொள்ளமாட்டோம் என்று வருவாய்த்துறையினர் எச்சரிக்கைவிடுத்திருந்தனர்.

இதனால் நவாஸ்கனி எம்பியின் உதவியாளரான விஜயராமு மீது கே.வி.கரை காவல்நிலையத்தில் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட தனது உதவியாளருக்கு ஆதரவாக எம்.பி நவாஸ்கனி சமாதான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளிகியாகி உள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.