Top 10 News: தமிழ்நாட்டில் இன்று ஆரஞ்சு அலார்ட்! இன்றைய டாப் 10 செய்திகள் இதோ!
”இன்றைய நாளின் (நவம்பர் 21) டாப் 10 செய்திகள் இதோ!”
கனமழை
- தமிழ்நாட்டில் இன்று ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்ட நிலையில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, தருமபுரி, கோவை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை
- சென்னையில் இன்று நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பூத் கமிட்டிகளை அமைப்பது தொடர்பாக ஈபிஎஸ் ஆலோசனை
- பலகோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் சுபிக்ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
- மருத்துவமனையில் உள்ள விஜயகாந்த் ஒரிரு நாளில் வீடு திரும்புவார் என தேமுதிக தலைமை கழகம் அறிவிப்பு
- திருவண்ணாமலையில் கைதான 20 விவசாயிகளுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது
- மூத்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்காமல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடந்ததாக கே.எஸ்.அழகிரி மீது ஈவிகேஎஸ் இளங்கோவன் புகார்
- ஊழல் மற்றும் வாரிசு அரசியலில்தான் காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்துவதாக ராஜஸ்தான் தேர்தல் பரப்புரையில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
- சாதனைகளை சொல்ல முடியாதவர்கள் சாதித்தவர்கள் பற்றி பேசுகின்றனர் - பாஜக மீது காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சனம்
- தேச நலன் கருதி ஒரே நாடு ஒரே தேர்தலை அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் - முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வேண்டுகோள்
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு
டாபிக்ஸ்
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.