Top 10 News: கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட சரக்கு கப்பல் மீட்பு உள்ளிட்ட முக்கிய செய்திகள்!
Morning Top 10 News: “தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு தொடர்பான இன்றைய டாப் 10 முக்கியச் செய்திகளை இந்த தொகுப்பில் பார்ப்போம்”
Morning Top 10 News: “தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு தொடர்பான இன்றைய டாப் 10 முக்கியச் செய்திகளை இந்த தொகுப்பில் பார்ப்போம்”
•தமிழ்நாட்டின் தொழில் திறத்தை அடிக்கோடிட்டு காட்டுவதாக தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு அமையும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒப்பந்தங்களை ஏற்படுத்த நல்ல வாய்ப்பு எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
•நீலகிரி, கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
•இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் இன்று நடைபெறுகிறது. 700 காளைகள் 300 மாடு பிடி வீரர்கள் பங்கேற்கும் போட்டிக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது
•அரபிக் கடலில் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட சரக்கு கப்பலை இந்திய கடற்படை மீட்டுள்ளது. கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 15 பேர் உள்ளிட்ட 21 பேரும் நலமுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
•ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு பேர் மீது வழக்கு தொடர்ந்த எம்.எஸ் தோனி புகார் செய்துள்ளார். தொழில் தொடர்பான ஒப்பந்தத்தை மீறிதால் ரூ15 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
•சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 595 ஆவது நாளாக மாற்றமில்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் இன்று (ஜன.06) பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
•பொங்கல் பரிசாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கும் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். பச்சரிசி,சர்க்கரை, முழு கரும்புடன் இலவச வேஷ்டி சேலை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
•தொடர் மழை காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணை அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் வெளியேற்றப்படுகிற நிலையில் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
•சென்னை ரன்னர்ஸ் மாரத்தான் ஓட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். சென்னை ரன்னர்ஸ் சார்பில் நடத்தப்படும் மாரத்தான் ஓட்டம் இன்று அதிகாலை சென்னை பெசண்ட் நகர் மற்றும் நேப்பியர் பாலத்தில் இருந்து தொடங்கியது.
•நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானுக்கு முடிந்த உதவிகளை செய்ய இந்தியா தயாராக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். •ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்றுள்ளது. மும்பையில் நடைபெற்ற போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
டாபிக்ஸ்