Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜி ஆளுநர் விவகாரம்- முதல்வர் ஆலோசனை!
இன்று தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகிறார். இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தங்கம் தென்னரசு, கே.என்.நேரு, வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கும் உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்தநிலையில் முதல்வர் இன்று அது குறித்து இன்று ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
அமைச்சரவையில் இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி செயல்படுவார் என்ற தமிழக அரசு முடிவு வெடுத்துள்ளது. இதற்கு ஆளுநர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கியதாக நேற்று மாலை முதல்வருக்கு கடிதம் அனுப்பி இருந்தார். இந்த சூழலில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அரசியல் சட்டத்தின் படியே நீக்கியதாக முதலமைச்சருக்கு எழுதிய முதல் கடித்தத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார்
பின்னர் நேற்று இரவே அந்த முடிவை நிறுத்தி வைப்பதாக மீண்டும் ஒரு கடிதத்தை எழுதி இருந்தார்.
இந்த நிலையில் இன்று தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகிறார். இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தங்கம் தென்னரசு, கே.என்.நேரு, வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்