MaSu Health: மா.சுப்பிரமணியனுக்கு ஆஞ்சியோ சிகிச்சை! ஓமந்துரார் மருத்துவமனை செய்திக் குறிப்பு!
”அமைச்சர் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை போதுமானது என்று முடிவு எடுக்கப்பட்டு, இன்று மதியம் 2.10 மணியளவில் மருத்துவமனையிலிருந்து இல்லம் திரும்பினார்”
அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆஞ்சியோ சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளதக ஓமந்தூரார் பன்நோக்கு மருத்துவமனை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் நாள்தோறும் நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சியை எடுத்து கொள்வது வழக்கம். அந்த வகையில் இன்று காலை நடை பயிற்சியும் ஓட்டப்பயிற்சியையும் முடித்தார். இதையடுத்து அவர் வீட்டில் பார்வையாளர்களைச் சந்தித்தார். அப்போது எதிர்பாராத விதமாக மயக்கம் ஏற்படவே தனது வீட்டின் அருகில் உள்ள கிண்டியில் செயல்பட்டு வரும் கலைஞர் கருணாநிதி உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மா.சுப்பிரமணியத்திற்கு ஏற்கனவே சர்க்கரை நோய் உள்ளது. இந்நிலையில் இன்று காலை அவருக்கு ரத்த சர்க்கரை அளவு குறைந்துள்ளது. அதனால் மயக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது சிகிச்சைக்கு பின் நல்ல நிலையில் உள்ளார். மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடல் நிலை குறித்து சென்னை ஓமந்தூரார் பன்நோக்கு மருத்துவமனை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (0.08.2023) அதிகாலை நடைப்பயிற்சி முடித்து மக்கள் விட்டு பார்வையாளர்களை சந்திக்கும் போது தலைச்சுற்றல் ஏற்ப்பட்டது.
உடனடியாக கலைஞர் நுற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமளைக்கு அழைத்து செல்லப்பட்டு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது, பரிசோதனையின் அடிப்படையில் அவர் தமிழ்நாடு அரசு பள்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு (Coronary anglogram) இருதய இரத்த நாள பரிசோதனை செய்ததில் குறிப்பிடத்தக்க அடைப்பு எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.
மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை போதுமானது என்று முடிவு எடுக்கப்பட்டு, இன்று மதியம் 2.10 மணியளவில் மருத்துவமனையிலிருந்து இல்லம் திரும்பினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்