Tamil News  /  Tamilnadu  /  Minister Durai Murugan Press Conference In Delhi Regarding Distribution Of Cauvery Water

Cauvery: ’உச்சநீதிமன்றம் மட்டும்தான் எங்கள் இறுதி நம்பிக்கை!’ டெல்லியில் துரைமுருகன் பேட்டி!

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

”ஒரு மூன்றாவது நபர் தண்ணீர் உள்ளதா இல்லையா என்று பார்த்துவிட்டு சொல்லட்டும் அதை ஏன் அவர்கள் எதிர்க்கிறார்கள்”

டெல்லியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாம்க நாளை காலை 9 மணிக்கு நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை தமிழக எம்.பிக்களுடன் சேர்ந்து சந்திக்க உள்ளோம். இன்றைக்கு நடக்கவிருந்த சந்திப்பு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

காவிரி நீர் ஒழுங்காற்று குழுவோ, காவிரி மேலாண்மை ஆணையமோ கண்ணை மூடிக் கொண்டு எந்த உத்தரவையும் பிறப்பிபதில்லை, அங்கு எவ்வுளவு தண்ணீர் உள்ளது என்பதை பார்த்த பிறகே தண்ணீர் விடுவது குறித்து அவர்கள் பரிந்துரைப்பார்கள்.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை ஆணையம் தனது பணிகளை சரியாக செய்கிறதா என்பதை பார்க்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு. அதை செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்க உள்ளோம்.

தண்ணீர் இல்லை என்று அவர்கள் சொல்கிறார்கள், தண்ணீர் உள்ளது என்று நாங்கள் சொல்கிறோம். ஆனால் ஒரு மூன்றாவது நபர் தண்ணீர் உள்ளதா இல்லையா என்று பார்த்துவிட்டு சொல்லட்டும் அதை ஏன் அவர்கள் எதிர்க்கிறார்கள்.

இந்த பிரச்னையில் எப்போதுமே கர்நாடகா தண்ணீர் தர ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். நடுவர் மன்றம் அமைக்க கோரியதை அவர்கள் எதிர்த்தார்கள். உச்சநீதிமன்ற அனுமதி உடன் இதனை அமைத்தோம். மத்திய அரசோ அல்லது மாநில அரசோ நாங்கள் உச்சநீதிமன்றத்தை மட்டுமே நம்புகிறோம்.

டாபிக்ஸ்