Anbil Mahesh: ‘அரசு ஊழியர்கள் ஓட்டு திமுக கூட்டணிக்கே’ -அமைச்சர் அன்பில் மகேஷ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Anbil Mahesh: ‘அரசு ஊழியர்கள் ஓட்டு திமுக கூட்டணிக்கே’ -அமைச்சர் அன்பில் மகேஷ்!

Anbil Mahesh: ‘அரசு ஊழியர்கள் ஓட்டு திமுக கூட்டணிக்கே’ -அமைச்சர் அன்பில் மகேஷ்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Jan 26, 2023 11:28 AM IST

‘அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி திமுக அரசு நிறைவேற்றியுள்ளதால் வாக்குகள் கிடைப்பதில் சிக்கல் இருக்காது’ -அன்பில் மகேஷ்

குடியரசு தின விழாவில் பங்கேற்று கொடியேற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ்
குடியரசு தின விழாவில் பங்கேற்று கொடியேற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ்

பல்வேற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஈரோடு இடைத்தேர்தலில் ஆசிரியர்களின் அரசு ஊழியர்களின் ஆதரவு திமுக கூட்டணிக்கு கிடைக்குமா? என்ற கேள்விக்கு, ‘அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிதி சார்ந்த பிரச்சினைகள் மட்டுமே நிறைவேற்றப்படாமல் உள்ளதாகவும் இதர கோரிக்கைகளை தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி திமுக அரசு நிறைவேற்றியுள்ளதால் வாக்குகள் கிடைப்பதில் சிக்கல் இருக்காது,’ என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

சென்னை கடற்கரை சாலையில் உள்ள பாரத சாரண சாரணியர் இயக்க அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.  பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது: 

‘‘சென்னையில் ஜி-20 கல்வி கருத்தரங்கில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொள்கின்ற போது தேசிய கல்விக் கொள்கையில் தமிழ்நாடு அரசுக்கு இருக்கக்கூடிய ஆட்சேபனைகள் குறித்து தெரிவிக்கப்படும்.  முதலமைச்சருடன் கலந்து ஆலோசனை செய்து அவரை நேரில் சந்திக்கவும் திட்டம் உள்ளது. 

கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்கத்தில் மதுரையில் கட்டப்பட்ட வரும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்கப்படும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிதி சார்ந்த பிரச்சினைகள் மட்டுமே நிறைவேற்றப்படாமல் உள்ளதாகவும் இதர கோரிக்கைகளை தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி திமுக அரசு நிறைவேற்றியுள்ளதால் வாக்குகள் கிடைப்பதில் சிக்கல் இருக்காது,’ என்றும் அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.