MHC:பழனி முருகன் கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரம்! அரசு விளக்கம்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Mhc:பழனி முருகன் கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரம்! அரசு விளக்கம்

MHC:பழனி முருகன் கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரம்! அரசு விளக்கம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 19, 2023 01:13 PM IST

பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரம் ஓதுவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் முருகன் தமிழ் கடவுள் என்பதால் அரசுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என அரசு தரப்பில் வாதம். இந்த விவகாரத்தில் நிலைய அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

பழனி கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரம் ஓதுவதற்கு உத்தரவிட கோரிய வழக்கில் அரசுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என வாதம் முன்வைக்கப்பட்டது
பழனி கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரம் ஓதுவதற்கு உத்தரவிட கோரிய வழக்கில் அரசுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என வாதம் முன்வைக்கப்பட்டது

தமிழ் கடவுள் முருகன் என போற்றப்படும் பழனி முருகன் கோயில் குடமுழுக்கை தமிழில் மந்திரம் ஓதி நடத்துவதே சிறப்பானதாகும். தமிழில் ஏராளமான மந்திரங்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே குடமுழுக்கின்போது மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் ஓதப்பட்டு வருகிறது.

கடந்த 2020ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கோயில் குடமுழுக்குகளிலும் தமிழில் மந்திரம் ஓத வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவானது பழனி முருகன் கோயிலுக்கும் பொருந்தும். தஞ்சை பெரிய கோயிலிலும் தமிழில் மந்திரம் கூறி குடமுழுக்கு நடத்துவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எனவே, அதன் அடிப்படையில் பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கின்போது தமிழில் மந்திரம் ஓதுவதற்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், முருகன் தமிழ் கடவுள் ஆவார். எனவே தமிழில் மந்திரம் ஓதுவதற்கு எந்த தனிநபரும் அரசாங்கத்துக்கு கருத்து கூற வேண்டியது இல்லை. தமிழ்நாடு அரசு பழனி முருகன் கோயிலின் குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரம் ஓதுவதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுத்துள்ளது என தெரிவிக்கப்பட்டது

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரம் ஓதப்படுகிறதா என்பது குறித்து நிலைய அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.