நாதக வேட்பாளர் மேனகா நவநீதன்! இனமாகவும் பணமாகவும் துணைநிற்க சீமான் வேண்டுகோள்!
Eode East NTK Candidate: ’’ஈரோடு கிழக்கு வெற்றியே இலக்கு என்ற முழக்கத்துடன் இடைத்தேர்தல் களத்தில் குதித்துள்ள நாம் தமிழர் கட்சிக்கு இனமாகவும் பணமாகவும் துணைநிற்க தொண்டர்களுக்கும் பொது மக்களுக்கும் வேண்டுகோள்’’

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆடைவடிவமைப்பு துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள மேனகா நவநீதன். தனியார் மருத்துவ நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். நாம் தமிழர் கட்சியில் இணைந்து ஈரொடு கிழக்கு மகளிர் பாசறை இணைச் செயலாளரா பொறுப்பு வகித்து வந்த நிலையில் தற்போது அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு வெற்றியே இலக்கு என்ற முழக்கத்துடன் இடைத்தேர்தல் களத்தில் குதித்துள்ள நாம் தமிழர் கட்சிக்கு இனமாகவும் பணமாகவும் துணைநிற்க தொண்டர்களுக்கும் பொது மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது
ஈரோடு மரப்பாலத்தில் நடைபெறுகிற வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் மேனகா நவநீதன் அவர்களை அறிமுகம் செய்து சிறிது நேரத்தில் உரையாற்ற உள்ளார்.