Trichy: திருச்சி காந்தி மார்க்கெட் கடை ஏலத்திற்கு இடைக்கால தடை
மாநகராட்சி சார்பாக எங்களுக்கு முன்னுரிமை அடிப்படையின் கடைகள் ஒதுக்கீடு செய்யாமல் ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என மனுதாரார் வழக்கு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட திருச்சி காந்தி மார்க்கெட் கட்டிடத்தில் ஒப்பந்தத்தின்படி சிக்கன் மட்டன் வியாபாரி சங்கத்திற்கு 44 கடைகளை ஒதுக்கீடு செய்ய கோரி வழக்கில் கடை ஏலத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளதுடன் மனு குறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருச்சியை சேர்ந்த அக்பர் அலி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், திருச்சி காந்தி மார்க்கெட்டில் சிக்கன் மட்டன் வியாபாரிகள் சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் சார்பாக 44 கடைகள் வைத்து பல வருடங்களாக நடத்தி வந்தோம் இந்நிலையில் சுமார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் காந்தி மார்க்கெட்டை இடித்து புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என திருச்சி மாநகராட்சி சார்பாக கடந்த 2021 ஆண்டு அறிவிப்பானை வழங்கப்பட்டது.
இதற்காக 13 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடும் செய்யப்பட்டு புது கட்டிடம் கட்ட ஏற்பாடு நடைபெற்றது எங்கள் சங்கத்தின் சார்பாக 44 கடை வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் புதிய கட்டிடத்தில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தருவோம் என்று மாநகராட்சி தரப்பில் உத்தரவாதம் அளித்து இருந்தனர் அதனை ஏற்று 44கடைகளையும் காலி செய்து கொடுத்திருந்தோம்.