12th Exam Result : அதிர்ச்சி தகவல்.. பிளஸ் 2 தேர்வில் குளறுபடி.. கூடுதலாக மதிப்பெண்களை வழங்கியது அம்பலம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  12th Exam Result : அதிர்ச்சி தகவல்.. பிளஸ் 2 தேர்வில் குளறுபடி.. கூடுதலாக மதிப்பெண்களை வழங்கியது அம்பலம்!

12th Exam Result : அதிர்ச்சி தகவல்.. பிளஸ் 2 தேர்வில் குளறுபடி.. கூடுதலாக மதிப்பெண்களை வழங்கியது அம்பலம்!

Divya Sekar HT Tamil
Jun 02, 2023 05:19 PM IST

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் ஏராளமான குளறுபடி நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களைக் காட்டிலும் கூடுதலாக வழங்கியதாக புகார் எழுந்துள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் ஏராளமான குளறுபடி
பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் ஏராளமான குளறுபடி

தமிழ்நாட்டில் 8 லட்சத்து 3 ஆயிரத்து 385 மாணவர்கள் தேர்வை எழுதிய நிலையில், 7 லட்சத்து 55 ஆயிரத்து 451 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதேநேரம், தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்ற மாணவர்கள், தங்களின் விடைத்தாள் நகலைப் பெற்று, அதில் தவறுகள் இருந்தால் மதிப்பெண்களை திருத்தம் செய்ய மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்தது.

இதன்படி விண்ணப்பித்து விடைத்தாள் நகலை மாணவர்கள் பெற்றுள்ளனர். இந்த நிலையில், இவ்வாறு விடைத்தாள் நகல் பெற்ற மாணவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் மதிப்பெண்கள் அதிகமாக போடப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது. அதிலும், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களைக் காட்டிலும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ள தகவலும் வெளியாகி உள்ளது.

விடைத்தாள் நகலில் மதிப்பெண்கள் வழங்கிய விபரத்தை பதிவு செய்ததைக் காட்டிலும், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தேர்வு முடிவுக்கான மதிப்பெண் பட்டியலில் கூடுதலாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் முதல் 7 மதிப்பெண்கள் வரை போடப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. கிட்டத்தட்ட ஒவ்வொரு பாடத்திலும் 5 முதல் 7 மதிப்பெண் கூடுதலாக போடப்பட்டிருப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்காக வேண்டுமென்றே இந்த குளறுபடி செய்யப்பட்டதா? இல்லையெனில், கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கு காரணமா? என கல்வியாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

குறிப்பாக ஒரு மாணவரின் விடைத்தாள் நகலில் கணினி பாடத்தில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் 66 என இருக்கின்ற நிலையில், இணையத்தில் வெளியான தேர்வு முடிவில் 69 என இருக்கிறது.தேர்வின்போது பெற்ற மதிப்பெண்களை விட, கூடுதலாக மதிப்பெண்களை பதிவு செய்த ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.