Loksabha election 2024: ’திமுக உடன் கொமதேக தொகுதி உடன்பாடு!’ எந்த தொகுதி தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Loksabha Election 2024: ’திமுக உடன் கொமதேக தொகுதி உடன்பாடு!’ எந்த தொகுதி தெரியுமா?

Loksabha election 2024: ’திமுக உடன் கொமதேக தொகுதி உடன்பாடு!’ எந்த தொகுதி தெரியுமா?

Kathiravan V HT Tamil
Feb 24, 2024 07:33 PM IST

”எதிரில் இருக்குக் கட்சிகளெல்லாம் கதவு, ஜன்னல், வெண்டிலேட்டர்களை திறந்து வைத்திருக்கும் போது எங்கள் கூட்டணி தமிழ்நாட்டின் மக்கள் நலனுக்காக பாடுபடும் உறுதியோடு பயணித்துக் கொண்டிருக்கிறோம்”

தொகுதி பங்கீட்டுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஈ.ஆர்.ஈஸ்வரன்
தொகுதி பங்கீட்டுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஈ.ஆர்.ஈஸ்வரன்

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகமும் கொங்குநாடு மக்கள்  தேசியக் கட்சியும், மற்ற  தோழமை கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக இன்று தொகுதி உடன்பாடுகள் குறித்து தி.மு.கழகமும், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியும் கலந்து பேசியதில் தி.மு.க. கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பின்வரும் ஒரு தொகுதியில் போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொகுதி பங்கீடு கையெழுத்தான பிறகு அண்ணா அறிவாலயத்தில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஒரு முடிவுக்கு வந்துள்ளோம். பின்னர் முதலமைச்சர் உடன் தொகுதி பங்கீட்டை ஏற்றுக் கொண்டு தொகுதி பங்கீட்டில் கையெழுத்திட்டுள்ளோம். 2019ஆம் ஆண்டை போல் நாமக்கல் தொகுதியில் போட்டியிட உள்ளோம். தமிழ்நாடு, பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி வாகை சூடும். விரைவில் எங்கள் பணிகளை தொகுதியில் துவக்குவோம். கூட்டணிக்கு யார் வருவார்கள் என எதிரில் இருக்குக் கட்சிகளெல்லாம் கதவு, ஜன்னல், வெண்டிலேட்டர்களை திறந்து வைத்திருக்கும் போது எங்கள் கூட்டணி தமிழ்நாட்டின் மக்கள் நலனுக்காக பாடுபடும் உறுதியோடு பயணித்துக் கொண்டிருக்கிறோம். உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிடுகிறோம். 

எங்கள் வேட்பாளர் யார் என்பதை எங்கள் செயற்குழு, ஆட்சிமன்றக் குழு கூடி முடிவெடுப்போம். புது முகத்திற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் அதற்கு வாய்ப்பு உள்ளது. எங்கள் எம்.பி சின்ராஜ் அவர்கள் ஏற்கெனவே போட்டியிடப்போவதில்லை என ஊடகங்களில் கூறி உள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.