Weather Update : எச்சரிக்கை.. அடுத்த ஆறு தினங்களுக்கு இந்த பகுதிகளில் மழை கொட்டுமாம்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்
Weather Update Today : தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

எச்சரிக்கை.. அடுத்த ஆறு தினங்களுக்கு இந்த பகுதிகளில் மழை கொட்டுமாம்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமாம்
கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு
தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவையில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
அதிகபட்ச வெப்பநிலை :
அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டியும் / இயல்பை விட குறைவாகவும் இருந்தது.
அதிகபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 38.5° செல்சியஸ் பதிவாகியுள்ளது.