Kushboo: பிச்சை எடுப்பதில் குஷ்புவுக்கு ஆர்வம்; மோடி தமிழகத்தில் டெபாசிட் வாங்கட்டும்- ஈவிகேஎஸ் இளங்கோவன் கடும் காட்டம்
EVKS: குஷ்புக்கு பிச்சை எடுப்பதில் ஆர்வம் உள்ளதால் விரைவில் பிச்சை எடுக்கும் நிலைமை வரும். மோடி சொல்வதும் அர்த்தம் கிடையாது , மோடி பற்றி மற்றவர்கள் சொல்வதிலும் அர்த்தம் கிடையாது. மோடியின் மொத்த உருவமே பொய் , புளுகு, பித்தலாட்டம் போட்டுவதுதான். ஸ்டிக்கர் ஒட்டு கலாச்சாரத்தை செய்தவர் ஜெயலலிதா தான்
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை கூடுதல் கட்டிடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.இதில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் , தமிழக காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்து கொண்டார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, " மோடி சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார், எப்படியும் தமிழக மக்களை மயக்கி அவர்களிடம் வாக்குகளைப் பெற்று எப்படியாவது பாஜகவுக்கு தமிழகத்தில் டெபாசிட் ஆவது வாங்க வேண்டும் என்று நினைத்து அடிக்கடி தமிழகம் வந்து சென்று கொண்டிருக்கிறார் .
நாட்டு மக்களை தங்கள் குடும்பம் என சொல்லும் மோடிக்கு சவால் விடுகிறேன். தமிழகத்தின் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று டெபாசிட் வாங்கினால் பிரதமராக ஏற்றுக்கொள்கிறேன்.
சிஏஏ சட்டம் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு தூக்கி எறியப்படும் என்றும் , காங்கிரஸ் இரண்டு வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதாகவும் , தமிழகத்தை பொறுத்தவரை மூன்று அல்லது நான்கு நாட்களில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றார்.
நடிகை குஷ்புக்கு பிச்சை எடுப்பதில் ஆர்வம் உள்ளதால் விரைவில் பிச்சை எடுக்கும் நிலைமை வரும். மோடி சொல்வதும் அர்த்தம் கிடையாது , மோடி பற்றி மற்றவர்கள் சொல்வதிலும் அர்த்தம் கிடையாது. மோடியின் மொத்த உருவமே பொய் , புளுகு, பித்தலாட்டம் போட்டுவதுதான்.
ஸ்டிக்கர் ஒட்டு கலாச்சாரத்தை செய்தவர் ஜெயலலிதா தான் என்றும் தமிழகத் திட்டங்களை மற்ற மாநிலங்களும் பின் தொடர்வது ஸ்டாலினின் 3 ஆண்டுகால சாதனை என்றார்.
போதைக்கு எதிராக தற்போது நடவடிக்கை எடுப்பதால் தான் அனைவரும் பிடிபடுகின்றனர். தமிழகத்தில் திமுக வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது. தமிழகத்தில் பாஜகவினர் டெபாசிட் வாங்கினாலே பெரிய விஷயம்" என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் குஷ்பு தன் பேச்சு குறித்து அளித்த விளக்கம் பின்வருமாறு
நான் பேசியது என்ன? - குஷ்பு விளக்கம்!
இந்த விவகாரம் தொடர்பாக நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், திமுகவில் உள்ள அத்தனை பேரும் என்னை பற்றி பேசி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். நான் எதையும் டெலிட் செய்யவில்லை. நான் ஐடி விங்கையோ, வார் ரூமையோ வைத்து பேசவில்லை. எத்தனை பேர் எனக்கு எதிராக எச்சரிக்கையாக விஷங்கள் சொல்லி இருக்காங்க; குஷ்பு பேசினால் அவ்வளவு பயமா?; குஷ்பு உண்மையை தைரியமாக பேசுவாள்.
டாஸ்மாக் கடைகளை எப்போது குறைப்பீர்கள்?
எந்தெந்த வகையில் மக்களை ஏமாற்றி உள்ளீர்கள் என்பது உங்களுக்கும், எனக்கும், மக்களும் தெரியும். டாஸ்மாக் கடை எண்ணிக்கையை குறைப்பீர்களா? குறைக்கமாட்டீர்களா?; இதனை முதல்வரும், உதயநிதி ஸ்டாலினும் சொன்னது.
ரூபாய் 2000 கோடி மதிப்புள்ள போதை பொருள் கடத்தலில் உங்கள் கட்சி நிர்வாகியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதில் எங்களுக்கு எந்த சம்பந்தம் இல்லை என்று நீங்கள் சொல்லலாம்.
அந்த தைரியம் உங்க தலைவனுக்கு இல்ல!
பழைய ட்வீட்களை எடுத்து போடுவது எங்கள் டி.என்.ஏ; தற்போதைய பிரச்னைகள் குறித்து பேச திமுகவிடம் எதுவும் இல்லை. திமுக பற்றி எனக்கு நல்லா தெரியும். அந்த தைரியம் உங்கள் தலைவனுக்கும் இல்ல; வேறு யாருக்கும் இல்ல.
தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் தருவதற்கு பதிலாக டாஸ்மாக்கை குறைத்தால் பல ஆயிரங்கள் சேமித்து சந்தோஷமாக குடும்பம் நடத்த முடியும் என்றுதான் நான் பேசி உள்ளேன். பெண்களை அவதூறு செய்வது, பெண்களை பற்றி தவறாக பேசுவது திமுகவின் டி.என்.ஏ.
பூச்சாண்டி வேலையெல்லாம் குஷ்புவிடம் காட்டாதீர்கள்; நான் தவறு செய்தால் சிறிய குழந்தையாக இருந்தாலும் கீழே விழுந்து மன்னிப்புக்கேட்பேனே தவிர ஓடமாட்டேன்.
என்னுடைய ஆசான் தலைவர் கலைஞர்!
அரசியல் நாகரீகம், மேடை நாகரீகம், தைரியமாக பேசக்கூடிய விஷயங்களை என்னுடைய ஆசான் தலைவர் கலைஞர் சொல்லிக் கொடுத்துள்ளார். ஆனால் சொல்லிக்கொடுத்த விஷயங்களை நான் என்றும் மறக்கமாட்டேன்.
உங்கள் புது தலைவருக்கு கீழ் நீங்கள் இப்படி பேச வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு புரிகிறது. அதனால் உங்கள் மீது எனக்கு கோபம் ஏற்படாமல், பரிதாபமே ஏற்படுகிறது.
உண்மை பேசுவதற்கு தைரியம் வேண்டும்; கல் தூக்கி வீசுவீர்கள், புடவையை பிடித்து இழுப்பீர்கள், ஆனால் பெண்கள் சமுதாயத்தில் அந்தஸ்துக்கு கொண்டுபோய் அழகு பார்க்க வேண்டுமென்ற எண்ணம் திமுகவுக்கு சுத்தமாக கிடையாது. நான் எந்த அளவுக்கு பெண்களுக்காக பேசுகிறேன் என்பது மக்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்