ஆளுநர் ஆர்.என். ரவியை தமிழக மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள் -கே.எஸ்.அழகிரி
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ஆளுநர் ஆர்.என். ரவியை தமிழக மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள் -கே.எஸ்.அழகிரி

ஆளுநர் ஆர்.என். ரவியை தமிழக மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள் -கே.எஸ்.அழகிரி

Divya Sekar HT Tamil
Aug 26, 2022 05:06 PM IST

தமிழகத்தின் ஆளுநர் பொறுப்பை ஏற்றதிலிருந்து, தன் ஆர்.எஸ்.எஸ். முகத்தை வெளிப்படையாக காண்பித்துக் கொண்டிருக்கிறார் ஆர்.என்.ரவி என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

<p>தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி</p>
<p>தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி</p>

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் நடந்த திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில், வழக்கம் போல் வகுப்புவாத விஷத்தை கக்கி தன்னை தீவிர ஆர்.எஸ்.எஸ்.காரராக காட்டியிருக்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. ஜி.யு. போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பில் பக்தி என்ற ஆன்மா வேண்டுமென்றே நீக்கப்பட்டதாக போகிற போக்கில் பொய்யான குற்றச்சாட்டை கூறியிருக்கிறார்.

குறளை மாற்றியோ, திரித்தோ யாரும் எழுதவில்லை என்பதே உண்மை. 2014 ஆம் ஆண்டு வரை, 82 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழியில் மட்டும் 57 மொழிபெயர்ப்புப் பதிப்புகள் கிடைக்கின்றன. இதுவரை திருக்குறள் திரிக்கப்பட்டதாக எந்த குற்றச்சாட்டும் எழுந்ததில்லை.

தமிழகத்தின் ஆளுநர் பொறுப்பை ஏற்றதிலிருந்து, தன் ஆர்.எஸ்.எஸ். முகத்தை வெளிப்படையாக காண்பித்துக் கொண்டிருக்கிறார் ஆர்.என்.ரவி. அதன் தொடர்ச்சியாகவே ஜி.யு.போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பு திருத்தப்பட்டதாக பொய்யான தகவலை தெரிவித்துள்ளார்.

இப்படி பொய்யும் புரட்டும் பேசும் ஒருவர் மாநில மக்களின் நலனில் அக்கறை காட்டுவார் என்று எதிர்பார்க்க முடியாது. தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த அறிஞர் பெருமக்களை கொச்சைப்படுத்துகிற ஆளுநர் ஆர்.என். ரவியை தமிழக மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். இத்தகைய போக்கை அவர் தொடருவாரேயானால் தமிழக ஆளுநர் பொறுப்பிலிருந்து அவர் விலக வேண்டிய நிலை உருவாகும் என எச்சரிக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.