Karur IT Raid : கரூர் ஐடி ரெய்டு - அதிகாரிகள் தாக்கப்பட்ட விவகாரம்.. முறையாக தகவல் தெரிவிக்கவில்லை.. எஸ்பி விளக்கம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Karur It Raid : கரூர் ஐடி ரெய்டு - அதிகாரிகள் தாக்கப்பட்ட விவகாரம்.. முறையாக தகவல் தெரிவிக்கவில்லை.. எஸ்பி விளக்கம்!

Karur IT Raid : கரூர் ஐடி ரெய்டு - அதிகாரிகள் தாக்கப்பட்ட விவகாரம்.. முறையாக தகவல் தெரிவிக்கவில்லை.. எஸ்பி விளக்கம்!

Divya Sekar HT Tamil
May 26, 2023 12:32 PM IST

கரூரில் வருமான வரித்துறை சோதனைக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என கரூர் எஸ்பி விளக்கம் அளித்துள்ளார்.

 கரூர் எஸ்பி விளக்கம்
கரூர் எஸ்பி விளக்கம்

மொத்தம் 40 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி வருகிறது. தமிழ்நாடு முழுக்க அவருக்கு இருக்கும் நிறுவனங்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரிடம் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜி நெருக்கமாக பழகும் எல்லோரும் வருமான வரித்துறை சோதனையில் சிக்கி உள்ளனர். கரூரில் இருக்கும் செந்தில் பாலாஜி வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கரூரில் அதிகாரிகளை முற்றுகையிட்டு திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடி திமுகவினரால் உடைக்கப்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. பாதுகாப்பு கருதி வருமானவரித்துறை அதிகாரிகள் கரூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதே போல் கரூரில் மற்ற இடங்களிலும் வருமான வரி சோதனைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கரூரில் நடைபெற்ற அனைத்து வருமான வரி சோதனையும் நிறுத்தப்பட்டது. அதிகாரிகள் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். இது குறித்து கரூர் மாவட்ட எஸ்பி சுந்தரவதனன் கூறுகையில், "கரூரில் வருமான வரித்துறை சோதனைக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களது பாதுகாப்புக்காக மத்திய ரிசர்வ் காவல் படையினரையும் அழைத்து வரவில்லை.

சோதனைக்கு வந்த அதிகாரிகள் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதாக தகவல் கிடைத்தவுடன், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சோதனை நடக்கும் இடங்களில் 150-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வருமான வரித்துறை அதிகாரிகள் புகார் அளித்தால் வழக்கு பதிவு செய்யப்படும் " என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.