Karnataka Election : கர்நாடக தேர்தல்.. முன்னிலையில் காங்கிரஸ்- முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Karnataka Election : கர்நாடக தேர்தல்.. முன்னிலையில் காங்கிரஸ்- முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து!

Karnataka Election : கர்நாடக தேர்தல்.. முன்னிலையில் காங்கிரஸ்- முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து!

Divya Sekar HT Tamil
May 13, 2023 01:19 PM IST

தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.

முதல்வர் மு க ஸ்டாலின்
முதல்வர் மு க ஸ்டாலின்

ஒட்டு மொத்தமாக 184 பெண்களும், ஒரு திருநங்கையும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டனர். இந்நிலையில் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2.67 லட்சம் பேரும், பெண் வாக்காளர்கள் 2.64 லட்சம் பேரும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 5ஆயிரம் பேரும் அடங்குவ‌ர்.

கடந்த 10-ந் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின் போது 73.19 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. இந்த நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில் தற்போது நிலவரப்படி கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 122, பாஜக 67, மஜத 27 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. பிற கட்சிகள் 8 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர்.

இந்த தேர்தலில் பாஜக அமைச்சர்கள் கடும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர். தற்போது நிலவரப்படி பாஜகவைச் சேர்ந்த 8 அமைச்சர்கள் குறைந்த வாக்குகளைப் பெற்று பின்னடைவில் உள்ளனர். எல்புர்கா தொகுதியில் போட்டியிட்ட சுரங்கம் மற்றும் புவியியல் துறை அமைச்சர் ஹாலப்பா ஆச்சார் பின்னடைவில் உள்ளார்.

வருணா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வீட்டு வசதித்துறை அமைச்சர் சோமண்ணா பின்னடைவு சந்தித்துள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சித்தராமையா தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். பாஜக உள்துறை அமைச்சராக இருந்த அரக ஞானேந்திரா, சிமோகா தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார். கனகபுரா தொகுதியில் போட்டியிட்ட அசோக், ராஜாஜி நகர் தொகுதியில் போட்டியிட்ட சுரேஷ் குமார் உள்ளிட்டோரும் பின்னடைவாக இருக்கின்றனர்

இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.