தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Kanimozhi Speech On Election Manifesto For Union Govt. Election In Vellore

Kanimozhi: மக்களின் அறிக்கையாக திமுக தேர்தல் அறிக்கை இருக்கும் - கனிமொழி பேச்சு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 24, 2024 06:55 AM IST

திமுகவால் தான் நாட்டின் தலையெழுத்தை, இன்றைய நிலையை மாற்றி . திமுக தேர்தல் அறிக்கை மக்களின் தேர்தல் அறிக்கையாக இருக்கும் என்று கனிமொழி கூறினார்.

தேர்தல் அறிக்கை குறித்து கனிமொழி பேச்சு
தேர்தல் அறிக்கை குறித்து கனிமொழி பேச்சு

ட்ரெண்டிங் செய்திகள்

இதில் திமுக எம்பி கனிமொழி எம்பி பேசும்போது கூறியதாவது"

"திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கை எப்போதும் மக்களின் தேர்தல் அறிக்கையாக இருக்கும். தலைவர் கருணாநிதி காலம் தொட்டு இன்று நமது திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான முக ஸ்டாலின் தொடர்ந்து மக்களை சந்தித்து அவர்களிடம் கருத்துகளை கேட்டு பதிவு செய்து அதை வைத்து தேர்தல் அறிக்கையை உருவாக்க வேண்டும் என கட்டளையிட்டனர்.

அதன்படி, நாங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, அங்கே இருக்கக்கூடிய விவசாய மக்கள், தொழிலாளர்கள், தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர், மாணவர்கள் என பலதரப்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டோம். தேர்தல் அறிக்கையை உருவாக்ககூடிய பணியில் இருக்கிறோம்.

உங்களது கோரிக்கைகள், கருத்துகளை, எங்களுக்கும் தரும் அறிவுரைகளை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு, அதை பரீசிலனை செய்து பின் முதலமைச்சருடன் கலந்துரையாடி தேர்தல் அறிக்கையை உருவாக்க இருக்கிறோம்.

திமுகவால் தான் நாட்டின் தலையெழுத்தை,இன்றைய நிலையை மாற்றி காட்ட முடியும்."

இவ்வாறு அவர் கூறினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்