Kalaignar Pen Statue: ‘பேப்பர் இல்லாத இடத்தில் பேனா எதுக்கு?’ நடிகை கஸ்தூரி கிண்டல்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kalaignar Pen Statue: ‘பேப்பர் இல்லாத இடத்தில் பேனா எதுக்கு?’ நடிகை கஸ்தூரி கிண்டல்!

Kalaignar Pen Statue: ‘பேப்பர் இல்லாத இடத்தில் பேனா எதுக்கு?’ நடிகை கஸ்தூரி கிண்டல்!

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 30, 2023 06:24 PM IST

Kasthuri Shankar: வங்கக்கடல்(Bay of Bengal) தான் கிடைத்ததா? அங்க தான் வைக்கணுமா? அங்க எழுத கூட முடியாதே. பேப்பரே இல்லாத இடத்தில பேனாவ எதுக்கு வைக்கணும்.

நடிகை கஸ்தூரி கிண்டல்
நடிகை கஸ்தூரி கிண்டல்

மறைந்த தமிழக முன்னாள் ஜெயலலிதாவின் 75ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக சென்னை வடபழனியில் நடைபெற்றது. இதுலு 1000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத் அவர் பேசியதாவது,

"இந்த விழாவிற்கு என்னை அழைத்த போது நான் கூறிய முதல் விஷயம் நான் தமிழகத்திலேயே இல்லை. குடும்பத்தோடு ஹைதராபாத்தில் தங்கி உள்ளேன். தெலுங்கில் தான் அதிக படம் நடித்து வருகிறேன். அதிமுகவில் நான் உறுப்பினர் அல்ல. ஆனால் எனக்கு ஓட்டுரிமை வந்ததிலிருந்து நான் அதிமுகவிற்கு தான் ஓட்டு போட்டு வருகிறேன். விஜயகாந்த் கட்சி தொடங்கிய போது ஒரே ஒரு முறை அவருக்கு வாக்களித்துள்ளேன்.

பெண் குழந்தைகள் கல்லூரி படிப்பைத் தொடருவதற்கான திட்டத்தை முதலில் துவக்கி வைத்தவர் ஜெயலலிதா. தாலிக்கு தங்கம், அம்மா உணவகம் போன்ற நலத்திட்டங்களை தொடக்கி வைத்தவர் ஜெயலலிதா. பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்த ஜெயலலிதா தற்போது நம்முடன் இல்லை. அவர் தெய்வமாகிவிட்டார். அவரை நாம் தெய்வமாக வணங்க வேண்டும்.

கட்சியை பார்த்து நலத்திட்ட உதவிகள் வழங்காமல் தேவையை அறிந்து உதவி வழங்குவது அதிமுகவின் சித்தாந்தத்தில் உள்ளது. மதுபான கடைகளை அகற்ற வேண்டும் என்று கட்சியை கடந்து நான் நிறைய விமர்சித்து உள்ளேன். திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுவை வழங்கலாம் என்று இப்போதுள்ள அரசு அறிவித்துள்ளது. அதை திமுக கட்சிக்காரர்களே விமர்சித்த பிறகு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்கள். ஆனால் வாபஸ் வாங்கவில்லை. ஆகவே மக்கள் விழிப்புணர்வோடு இருந்தால் தான் இம்மாதிரியான அநியாயங்களை நிறுத்த முடியும்.

கடலில் பேனா வைப்பது பெரிது அல்ல. ஒவ்வொரு வீட்டில் பேனா பிடித்து குழந்தைகள் பள்ளிக்கூடம் போக வேண்டும். அது தான் பெரிது. கலைஞரை மரியாதை பண்ண வேண்டும் என்றால் நூலகங்கள் கட்டணும். அதை விடுத்து திருவள்ளுவர் சிலையை விட ஒரு அடி அதிகமாக கடலில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படும் வகையில் கடலில் பேனா வைக்கிறீர்கள். பேனா வைக்கலாம். பேனா வைக்க இடமாக இல்ல. உங்கள் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். யார் வேண்டாம் என்று சென்னது. அதுக்கு வங்கக்கடல்(Bay of Bengal) தான் கிடைத்ததா? அங்க தான் வைக்கணுமா? அங்க எழுத கூட முடியாதே. பேப்பரே இல்லாத இடத்தில பேனாவ எதுக்கு வைக்கணும்.

சினிமாவில் வேலை செய்பவர்களுக்கு தெரியும் எந்த நேரத்தில் வேலை செய்ய வேண்டும் என்றாலும், அதற்கு ஏற்ற வசதிகளை செய்து கொடுத்தாலும் கூட அங்கு வேலை செய்வது மிகவும் கடினம். அப்படி இருக்கும் பொழுது தொடர்ச்சியாக ஓய்வு இல்லாமல் 12 மணி நேரம் தொழிலாளர்களாக எப்படி வேலை செய்ய முடியும்? நான்கு நாட்கள் பட்டினியாக இருந்துவிட்டு மூன்று நாட்கள் சேர்த்து சாப்பிட முடியுமா அதைப் போலத்தான் அரசாங்கத்தின் 12 மணி நேர வேலை திட்டம். இது சாதாரண மக்களுக்கு எப்படி பயனளிக்கும்’ என்று கடுமையா ஆளும் திமுக அரசு குறித்த விமர்சனங்களை முன் வைத்து பேசினார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.