Vairamuthu: வீடு இல்லாம தெருவுலயா இருக்காரு ? இவருக்கு எதுக்கு கனவு இல்லம் வீடு? தமிழ்நாடு அரசை விளாசும் சவுக்கு சங்கர்
வீடு இல்லாம தெருவுலயா இருக்காரு ? இவருக்கு எதுக்கு கனவு இல்லம் வீடு ? பெரியார் படத்துல ஒரு பாட்டுக்கு 5 லட்சம் வாங்குன பெரிய மனுசன் என்றும் சவுக்கு சங்கர் விமர்சித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து - பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர்
கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கவிஞர் வைரமுத்துவுக்கு வீடு வழங்குவதற்கு அரசியல் விமர்சகரும் பத்திரிக்கயாளருமான சவுக்கு சங்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை சேர்ந்த எழுத்தாளர்களில் ஜானபீடம், சாகித்ய அகாதமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகளை பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் வசிக்கு மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் மூலம் ‘கனவு இல்லம்’ என்ற பெயரில் வீடு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதன்படி கடந்த 2 ஆண்டுகளாக மேற்கட்ட விருதுகளை பெற்ற எழுத்தாளர்களுக்கு கௌரவம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மாவட்ட வாரியாக வீடுகளை வழங்கி வருகிறது.
