தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Job Opportunity News In Kallakurichi District

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் வேலைவாய்ப்பு

Priyadarshini R HT Tamil
Feb 04, 2023 02:33 PM IST

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர் பணியிடங்களுக்கு ஆண்/பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்தும் மற்றும் பருவகால காவலர் பணியிடங்களுக்கு ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

தகுதிகள் மற்றும் விவரங்கள் 

பதவி பருவகால பட்டியல் எழுத்தர் ஆண்/பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.5285+3499 (அகவிலைப்படி) மற்றும் பணிநாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ.120 வழங்கப்படும். காலிப்பணியிடங்கள் 20, பிஎஸ்சி தாவரவியல், விலங்கியல், வேதியியல்) வேளாண்மை மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் 18 முதல் 37 வயதுக்கு உட்பட்டவராகவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச சேர்ந்தவர்கள் 18 முதல் 34 வயதுக்கு உட்பட்டவராகவும், மற்ற பிரிவினர் 18 முதல் 32 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். 

பருவகால உதவுபவர் ஆண்/பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.5218+3490 (அகவிலைப்படி) பணிநாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படிரூ.100 வழங்கப்படும். காலிப்பணியிடங்கள் 40, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் 18 முதல் 37 வயதுக்கு உட்பட்டவராகவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச சேர்ந்தவர்கள் 18 முதல் 34 வயதுக்கு உட்பட்டவராகவும், மற்ற பிரிவினர் 18 முதல் 32 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.  

பருவகால காவலர் ஆண் மட்டும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.5218+3499 (அகவிலைப்படி) பணிநாள் ஒன்றுக்கு போக்குவரத்துப் படிரூ.100 வழங்கப்பட்டும். காலிப்பணியிடங்கள் 40. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் 18 முதல் 37 வயதுக்கு உட்பட்டவராகவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச சேர்ந்தவர்கள் 18 முதல் 34 வயதுக்கு உட்பட்டவராகவும், மற்ற பிரிவினர் 18 முதல் 32 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். 

இந்த தகுதிகளையுடைய, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட விண்ணப்பதாரர்கள் அனைத்து கல்விச்சான்றிதழ் நகல்களுடன் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், சேலம் தேசிய நெடுஞ்சாலை, மாடூர் சுங்கச்சாவடி அருகில், கள்ளக்குறிச்சி-606202 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலம் மட்டுமே வரும் 7ம் தேதி மாலை 5 மணிக்குள் மண்டல அலுவலகத்தில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. தாமதமாக வரப்பெறும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்