தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Job Opportunity Join Idbi Bank Assistant Manager Post Apply Online Details Inside

Job Opportunity: ஐடிபிஜ வங்கியில் உதவி மேலாளர் வேலை – விவரங்கள் உள்ளே…

Priyadarshini R HT Tamil
Feb 18, 2023 01:17 PM IST

Bank Jobs: ஐடிபிஐ வங்கியில் உதவி மேலாளர் வேலைக்கு வரும் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், உதவி மேலாளர் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். https://www.idbibank.in/idbi-bank-careers-current-openings.aspx. என்ற இந்த லிங்கை பயன்படுத்தி வங்கியின் வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. எவ்வித இடைத்தரகர்களும் கிடையாது. நேரடியாக வங்கி வலைதளத்தில் பதிவு செய்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. யாரையும் நம்பி ஏமாறவேண்டாம்.

மொத்த 600 காலியிடங்கள் உள்ளன. பொதுவிற்கு 244 இடமும், பட்டியலின மக்களுக்கு 207 இடமும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 89 இடமும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 60 இடமும், மாற்றுத்திறனாளிகளுக்கு 32 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலையில் பெயர் – உதவி மேலாளர்

கல்வித்தகுதி – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

அனுபவம் – வங்கி நிதி சேவைகள் மற்றும் காப்பீடு பிரிவில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.

வயது – 01.01.2023ன்படி, 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். பட்டியல் இனத்தவர், பிற்படுத்தப்பட்டவர், மாற்றுத்திறனாளர், முன்னாள் ராணுவ வீரர் ஆகியோருக்கு அரசு வழிகாட்டுதல் படி தளர்வு அளிக்கப்படும்.

இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் ஆன்லைன் தேர்வுகள் நடக்கலாம் அல்லது தேர்வு தேதி குறித்த முழு விவரம் விரைவில் தெரிவிக்கப்படும்.

ஆன்லைனில், பிப்ரவரி 17ம் தேதி முதல் பிப்ரவரி 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்படிவத்திற்கான கட்டணமும் ஆன்லைனிலேயே விண்ணப்பித்தவுடனே செலுத்திவிட வேண்டும். ஆன்லைன் தேர்வுகள் வரும் ஏப்ரல் மாதத்தில் நடக்கலாம். எனினும் அதுகுறித்த விரிவான விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும். அதை ஐடிபிஐ வங்கியின் வலைதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

வங்கியின் உதவி மேலாளராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், ரூ.36 ஆயிரம் மாதச்சம்பளம் வழங்கப்படும். சம்பளம், இதர அலவன்ஸ்கள் மற்றும் செலவு செய்துவிட்டு திரும்பப்பெறும் ரீஇம்பர்ஸ்மென்ட்கள் குறித்த விவரங்களை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

வங்கியில் சேர்ந்த ஓராண்டு தகுதிக்கான காலமாக கருதப்படும். வங்கியின் எந்த அலுவலகத்திலும், எந்த துறையிலும் பணி செய்ய வேண்டும். இந்தியாவுக்குள்ளும், இந்தியாவுக்கு வெளியேயும் வேலை செய்ய வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறையில் முதலில் ஆன்லைன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு, மருத்துவ பரிசோதனைகள் என்ற அடிப்படையில் நடைபெறும். இவற்றை மாற்றி அமைக்கவும் வங்கிக்கு முழு அதிகாரம் உள்ளது.

தேர்வில், லாஜிக்கல் ரீசனிங், டேட்டா அனாலிசிஸ், இன்டர்பிரடேன் ஆகிய தலைப்பில் 60 மதிப்பெண்களுக்கும், ஆங்கில மொழி 40 மதிப்பெண்களுக்கும், குவாண்டிடேட்டிவ் ஆப்டிடியூட் 40 மதிப்பெண்களுக்கும், பொது, பொருளாதாரம், வங்கியியல், கணின், தகவல் தொழிநுட்பம் ஆகிய பிரிவுகளில் இருந்து 60 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் கேட்கப்படும். தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடத்தப்படும். ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனி கட்ஆப் மதிப்பெண்கள் பெற வேண்டும். தவறான விடைகளுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படும். ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மதிப்பெண், வயது அடிப்படையில் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

மேலதிக விவரங்களுக்கு கீழே உள்ள பிடிஎப்யை கிளிக் செய்து பயன்பெறலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்