Jafar Sadiq: ரூ.2000 கோடி மதிப்பிலான போதை பொருள் வழக்கில் தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைது?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Jafar Sadiq: ரூ.2000 கோடி மதிப்பிலான போதை பொருள் வழக்கில் தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைது?

Jafar Sadiq: ரூ.2000 கோடி மதிப்பிலான போதை பொருள் வழக்கில் தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைது?

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 09, 2024 12:23 PM IST

Jafar Sadiq Arrest: ரூ.2000 கோடி மதிப்பிலான போதை பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் திமுக நிர்வாகியும் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் வெளிநாடு தப்பி செல்வதை தடுக்க லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் தற்போது கைது செய்யப்படுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜாபர் சாதிக் கைது
ஜாபர் சாதிக் கைது

2000 கோடி மதிப்புள்ள போதை பொருளை கடத்திய வழக்கில் தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை மத்திய போதை பொருள் தடுப்பு காவல்துறை தேடி வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்.சி.பி) மற்றும் டெல்லி காவல்துறையின் கூட்டுக் குழு மூன்று நபர்களை கைது செய்தனர். இவர்கள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்கு அனுப்பப்பட்ட 50 கிலோ போதைப்பொருள் தயாரிக்கும் ரசாயனத்தை கலப்பு உணவுத் தூள் மற்றும் உலர்ந்த தேங்காயில் மறைத்து கடத்தி இருந்தனர்.

இதன் மூலம் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் அம்பலப்படுத்தியது.

இது தொடர்பாக என்சிபி துணை இயக்குநர் ஜெனரல் (டி.டி.ஜி) ஞானேஷ்வர் சிங் கூறுகையில், கைது செய்யப்பட்ட மூன்று நபர்கள், கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 45 சூடோபீட்ரின் ஏற்றுமதிகளை அனுப்பியதாக போதைப்பொருள் தடுப்பு நிறுவனத்திற்கு தகவல் அளித்ததாக தெரிவித்தார். இந்த ஏற்றுமதிகள் சுமார் 3,500 கிலோ சூடோபிட்ரின் ஆகும், இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ .2,000 கோடியைத் தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஏறக்குறைய நான்கு மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அதிகாரிகள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் என்சிபி மற்றும் டெல்லி போலீஸ் குழுக்கள் நெட்வொர்க்கை கண்டுபிடித்துள்ளதாக ஞானேஷ்வர் சிங் கூறி இருந்தார்.

மேலும் இந்த போதை பொருள் கடத்தல் கூட்டணியின் சூத்திரதாரி ஒரு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் தலைமறைவாக உள்ளார். சூடோபீட்ரின் மூலத்தை கண்டறிய அவரை கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று ஞானேஸ்வர் சிங் கூறி இருந்தார்.

இதனை அடுத்து திமுகவின் அயலக அணியின் நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக் அப்பொறுப்பில் இருந்தும் கட்சியில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

ஜாபர் சாதிக் நேரில் ஆஜர் ஆக வேண்டும் என சென்னை மயிலாப்பூரில் உள்ள அருளானந்தம் தெருவில் உள்ள அவரது வீட்டில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டிவிட்டு சென்றனர்.

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அன்று ஜாபர் சாதிக் ஆஜர் ஆக வேண்டிய நிலையில், இதுவரை ஆஜராகமல் தலைமறைவாக இந்து வந்தார். இந்நிலையில் தற்போது ஜாபர் சாதிக்கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முன்னதாக தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் உடன் தமிழக டிஜிபி சங்கர்ஜிவால் இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆனது. இந்த நிலையில், இது தொடர்பாக அவர் அளித்திருந்த விளக்கத்தில், தாம் சென்னை மாநகர காவல் அணையராக இருந்தபோது 10 சிசிடிவி கேமிராக்களை ஜாபர் சாதிக் ஸ்பான்சர் செய்தார். போதை பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் குற்றவாளி என்று தெரிந்தது, சிசிடிவி கேமராக்களை நிறுத்தி விட்டோம். ஜாபர் சாதிக்கிற்கு தாம் கொடுத்தது விருது அல்ல என்றும், அது வெறும் பரிசுப்பொருள்தான் என்றும் சங்கர் ஜிவால் கூறியது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.