Kendriya Vidyalaya Sangathan: கேந்திரிய வித்யாலயாவில் அநீதி-சு.வெங்கடேசன் எம்.பி குற்றச்சாட்டு
KVS: கேந்திரிய வித்யாலயா இந்த நியமனங்களை முழு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அதற்கு பின்னரே இறுதி தேர்வுப் பட்டியலை வெளியிட வேண்டும்.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதல்வர், உதவி ஆணையர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்ட 957 பேரில் ஒரு தமிழர் கூட இல்லை. இது கேந்திரிய வித்யாலயாவில் நடந்துள்ள அநீதி என்று சு.வெங்கடேசன் எம்.பி குற்றம் சாட்டி உள்ளார். இதனால் இந்த தேர்வினை முழு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.
கேந்திரிய வித்யாலயா நடத்தியுள்ள முதல்வர், உதவி ஆணையர் நேரடி நியமன தேர்வுகளில் நேர்காணலுக்கு தெரிவு செய்யப்பட்ட முறையே 784 & 173 பேர்களில் ஒரு தமிழர் கூட இல்லை. இது அநீதி. அதிர்ச்சி தருவது. நியமன முறையின் நம்பகத்தன்மையே கேள்விக்கு ஆளாகியுள்ளது.
தேர்வுப் பட்டியலில் தென்படும் இன்னொரு பிரச்சினை. "மெரிட்" எனும் வகையில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டவர்களில் எவ்வளவு பேர் ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி என்ற விவரங்கள் இல்லை. "மெரிட்" டில் வரக் கூடிய இட ஒதுக்கீட்டுப் பிரிவினரை இட ஒதுக்கீடு எண்ணிக்கையில் சரிக் கட்டக் கூடாது என்ற நெறிகள் மீறப்பட்டுள்ளனவா என்ற கேள்வி எழுகிறது.
பெயர்களை வைத்து சமூக அடையாளம் அறியும் சூழ்நிலை இந்திய சமுகத்தில் உள்ளது துரதிருஷ்டம். ஆனாலும் இங்கு அதுவே பாரபட்சத்தை வெளிக் கொண்டும் வருகிறது. முதல்வர் பதவிக்கு நேர்காணல் அழைக்கப்பட்ட பழங்குடியினர் 58 பேரில் 28 "மீனா"க்கள் உள்ளனர். ஆனால் 327 பொதுப் பட்டியல் (UR) தேர்வர்களில் ஒரு "மீனா" கூட இல்லை. இது அப்பட்டமாக தெரிகிற ஒரு உதாரணமே. வெளிப்படையான பட்டியல் ஆக இது இல்லை. எத்தனை ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி தேர்வர்கள் பொதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பதை கேந்திரிய வித்யாலயா சங்காதன் தெரிவிக்க வேண்டும்.
ஆகவே கேந்திரிய வித்யாலயா இந்த நியமனங்களை முழு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அதற்கு பின்னரே இறுதி தேர்வுப் பட்டியலை வெளியிட வேண்டும்.
தமிழர்களுக்கும், ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கும் அநீதி இழைக்கப்படாமல் உறுதி செய்ய வேண்டும்.
இது குறித்து ஒன்றிய கல்வி அமைச்சர் மாண்புமிகு தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு கடிதம் ஒன்றை இன்று எழுதியுள்ளேன்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்