Chennai Police Commissioner: ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுப்பேன்! புதிய காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் பேட்டி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Chennai Police Commissioner: ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுப்பேன்! புதிய காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் பேட்டி!

Chennai Police Commissioner: ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுப்பேன்! புதிய காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் பேட்டி!

Kathiravan V HT Tamil
Jul 08, 2024 04:31 PM IST

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து நான் கருத்து சொல்ல முடியாது. ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கைகளை எடுப்போம். என்னை நம்பி இந்த பொறுப்பை கொடுத்து உள்ள அரசுக்கும், முதலமைச்சருக்கும் நல்ல பெயர் கிடைக்கும்படி நாங்கள் செயல்படுவோம் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் பேட்டி

COP Arun IPS: ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுப்பேன்! புதிய காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் பேட்டி!
COP Arun IPS: ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுப்பேன்! புதிய காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் பேட்டி!

காவல் அதிகாரிகள் இடமாற்றம்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூர் பகுதியில் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து உள்ள நிலையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என குற்றச்சாட்டுக்களை எழுப்பினர். 

இந்த நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோரை தமிழ்நாடு அரசு இடமாற்றம் செய்த நிலையில், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக உள்ள அருண் சென்னை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் காவல் பயிற்சியக கல்லூரி தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். காவல்துறை தலைமையகத்தின் ஏடிஜிபியாக உள்ள டேவிட்சன் தேவாசிர்வாதம், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

சென்னை எனக்கு புதிது அல்ல!

சென்னை எழும்பூரில் உள்ள சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்ட அருண் ஐபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  சென்னை மாநகர காவல் ஆணையராக நான் பொறுப்பேற்று உள்ளேன். சென்னை மாநகரம் எனக்கு புதிது அல்ல. சென்னையில் பல்வேறு பொறுப்புகளை நான் வகித்து உள்ளேன்.

ரவுடிசத்தை கடுப்படுத்துவதே முதல் வேலை 

சட்டம் ஒழுங்கு பிரச்னை, குற்றத்தடுப்பு நடவடிக்கைகள், போக்குவரத்து சிக்கல்கள், ரவுடிசத்தை கடுப்படுத்துவது, காவல்துறையில் உள்ள ஊழல் முறைகேடுகள், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவைகளை கட்டுப்படுத்துவது நான் தரும் முன்னுரிமையாக இருக்கும். 

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதா?

என்னை பொறுத்தவரை இது ஒரு முக்கியமான பதவியாக பார்க்கிறேன். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்பதை எதை வைத்து சொல்வது. அடிப்படையில் புள்ளி விவரங்கள் வேண்டும். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதா என்பதை புள்ளி விவரத்தை வைத்துதான் சொல்ல வேண்டும். ரவுடிகளின் செயல்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்பதில்தான் எங்கள் முன்னுரிமை அளிப்பேன் என கூறினார். 

ஆம்ஸ்ட்ராங் வழக்கு குறித்த கருத்து 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்தும் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர்,  அது பற்றி எனக்கு தெரியவில்லை, அது குறித்து நான் விசாரிக்க வேண்டும். அப்படி இருந்தால், அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பேன்.  ரவுடிகளை ஒழிக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.   

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை 

போதை பொருட்கள் பரவல் அதிகரித்துவிட்டதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ”தினமும் ஒரு திட்டம் கொடுப்பதால் பிரயோஜனம் கிடையாது. காவல் அதிகாரிகள் தங்கள் பணியை தொடர்ந்து செய்தாலே குற்றங்கள் குறையும்” என தெரிவித்தார்.  

மேலும்,  ஆம்ஸ்ட்ராங் வழக்கு குறித்து நான் கருத்து சொல்ல முடியாது. ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கைகளை எடுப்போம். என்னை நம்பி இந்த பொறுப்பை கொடுத்து உள்ள அரசுக்கும், முதலமைச்சருக்கும் நல்ல பெயர் கிடைக்கும்படி நாங்கள் செயல்படுவோம் என கூறினார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:-

Twitter: https://twitter.com/httamilnews 

இந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

https://www.whatsapp.com/channel/0029Va9NEUA7IUYU4eBTc81v 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.